Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif

Numri i faqes:close

external-link copy
44 : 12

قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ ۚ— وَمَا نَحْنُ بِتَاْوِیْلِ الْاَحْلَامِ بِعٰلِمِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “(இவை) பொய்யான (குழம்பிய) கனவுகளாகும். (வீணான) கனவுகளுக்குரிய விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இல்லை.” info
التفاسير:

external-link copy
45 : 12

وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟

ஆனால், அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: - அவனோ சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு படுத்திக் கொண்டான். - “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்.” info
التفاسير:

external-link copy
46 : 12

یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ— لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟

யூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள், - அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன - அது பற்றியும்; இன்னும், பசுமையான ஏழு கதிர்கள், மற்றும் காய்ந்த வேறு (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும், அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும். info
التفاسير:

external-link copy
47 : 12

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِیْنَ دَاَبًا ۚ— فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِیْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِیْلًا مِّمَّا تَاْكُلُوْنَ ۟

(யூஸுஃப்) கூறினார்: “வழக்கமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். ஆக, நீங்கள் புசிப்பதற்குத் தேவையான கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அறுவடை செய்ததை அதன் கதிரிலேயே விட்டு விடுங்கள்.” info
التفاسير:

external-link copy
48 : 12

ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ یَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِیْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ۟

“பிறகு, அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சமுடைய) ஏழு (ஆண்டுகள்) வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தியதில் கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அவற்றுக்காக முற்படுத்தி (சேமித்து) வைத்திருந்தவற்றை அவை தின்னு (அழித்து விடு)ம். info
التفاسير:

external-link copy
49 : 12

ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِیْهِ یُغَاثُ النَّاسُ وَفِیْهِ یَعْصِرُوْنَ ۟۠

பிறகு, அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். இன்னும், அவர்கள் (ஸைத்தூன், திராட்சை ஆகியவற்றை) பிழி(ந்து எண்ணெயையும் பழரசங்களையும் உற்பத்தி செய்து கொள்)வார்கள். info
التفاسير:

external-link copy
50 : 12

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ— فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ— اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟

(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் கூறினார்: “(எனது கனவுக்கு விளக்கமளித்த) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்.” ஆக, (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது, அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன?” என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
51 : 12

قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ— قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ— قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ— اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟

(அரசர், அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினார்கள். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்ப்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். இன்னும், நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் இருக்கிறார்.” info
التفاسير:

external-link copy
52 : 12

ذٰلِكَ لِیَعْلَمَ اَنِّیْ لَمْ اَخُنْهُ بِالْغَیْبِ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِیْ كَیْدَ الْخَآىِٕنِیْنَ ۟

“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களின் சதி திட்டத்தை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (அந்த பெண்களை விசாரிக்கும்படி நான் கூறினேன் என்று யூஸுஃப் விளக்கம் அளித்தார்).” info
التفاسير: