Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif

Numri i faqes:close

external-link copy
31 : 12

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ— فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؗ— وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ— اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟

ஆக, அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். இன்னும், அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே! அறையிலிருந்து) அவர்கள் முன் வெளியே வருவீராக! எனக் கூறினாள். அவரை அப்பெண்கள் பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். இன்னும், (பழத்தை அறுப்பதற்கு பதிலாக) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். இன்னும், “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதரே இல்லை! இவர் இல்லை, (அழகான) கண்ணியமான ஒரு வானவராகவே தவிர.” info
التفاسير:

external-link copy
32 : 12

قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِیْ لُمْتُنَّنِیْ فِیْهِ ؕ— وَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ؕ— وَلَىِٕنْ لَّمْ یَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَیُسْجَنَنَّ وَلَیَكُوْنًا مِّنَ الصّٰغِرِیْنَ ۟

“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான்தான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். ஆனால், அவர் (தன்னை) பாதுகாத்துக் கொண்டார். இன்னும், அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், இன்னும், நிச்சயமாக அவர் இழிவானவர்களில் ஆகிவிடுவார்” என்று (அந்த பெண்களிடம் மந்திரியின் மனைவி) கூறினாள். info
التفاسير:

external-link copy
33 : 12

قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ ۚ— وَاِلَّا تَصْرِفْ عَنِّیْ كَیْدَهُنَّ اَصْبُ اِلَیْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِیْنَ ۟

(யூஸுஃப்) கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதை (செய்வதை) விட (நான்) சிறை(யில் தள்ளப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. இன்னும், நீ என்னை விட்டும் அவர்களின் சதி திட்டத்தை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் ஆசைப்பட்டு விடுவேன். இன்னும், அறிவீனர்களில் ஆகிவிடுவேன்.” info
التفاسير:

external-link copy
34 : 12

فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَیْدَهُنَّ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

ஆக, அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்த்னையை ஏற்றுக் கொண்டான். ஆகவே, அவர்களின் சதி திட்டத்தை அவரை விட்டும் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
35 : 12

ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠

பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் (இந்த செய்தி நகரத்தில் பரவி விடக்கூடாது என்பதற்காக) அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என (எண்ணம்) அவர்களுக்குத் தோன்றியது. info
التفاسير:

external-link copy
36 : 12

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ— قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ— وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ— نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ— اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

(ஆகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள் குற்றங்களுக்காக) நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். இன்னும், மற்றவனோ, “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்கும் நிலையில், அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று அவ்விருவரும் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
37 : 12

قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ— ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ— اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்கள் இருவரிடம் வராது, அது உங்கள் இருவரிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது, என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். இன்னும், அவர்களோ மறுமையை நிராகரிக்கிறார்கள். info
التفاسير: