Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif

Numri i faqes:close

external-link copy
23 : 12

وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ— قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

இன்னும், அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து, “(என்னை நோக்கி) வருவீராக” என்று கூறினாள். (அதற்கு யூஸுஃப்) கூறினார்: “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர். என்னை அழகிய தங்குமிடத்தில் தங்க வைத்தார். நிச்சயமாக (நன்றி கெட்ட) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.” info
التفاسير:

external-link copy
24 : 12

وَلَقَدْ هَمَّتْ بِهٖ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ— كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ— اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟

திட்டவட்டமாக அவள் அவரை நாடினாள்; இன்னும், அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில் (அவர் தவறில் விழுந்திருப்பார்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டினோம்). நிச்சயமாக, அவர் (நபித்துவத்திற்காக) தூய்மையாக்கப்பட்ட (தேர்ந்தெடுக்கப்பட்ட) நம் அடியார்களில் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
25 : 12

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ— قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟

இருவரும், வாசலை நோக்கி ஓடினார்கள். அவளோ அவருடைய சட்டையை பின்புறத்திலிருந்து கிழித்தாள். இன்னும், வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் இருவரும் கண்டனர். (உடனே) அவள் கூறினாள்: “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையில் அடைக்கப்படுவது; அல்லது, (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு தண்டனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை.” info
التفاسير:

external-link copy
26 : 12

قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ— اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

(யூஸுஃப் அதை மறுத்தார்.) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்” என்று கூறினார். இன்னும், அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள். அவரோ பொய்யர்களில் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
27 : 12

وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

இன்னும், அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள். அவரோ உண்மையாளர்களில் இருக்கிறார்.” info
التفاسير:

external-link copy
28 : 12

فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ— اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟

ஆக, அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது, “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதி திட்டத்திலிருந்து உள்ளதாகும். நிச்சயமாக உங்கள் சதி திட்டம் மகத்தானது” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
29 : 12

یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ— وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ— اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠

“யூஸுஃபே! நீர் இதை புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடு. நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்.” info
التفاسير:

external-link copy
30 : 12

وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ— قَدْ شَغَفَهَا حُبًّا ؕ— اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

இன்னும், நகரத்திலுள்ள பெண்கள் கூறினார்கள்: “அதிபரின் மனைவி தன் (அடிமையாக இருக்கின்ற) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். திட்டமாக அவர் மீது அவள் வைத்த அன்பு அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி விட்டது! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்.” info
التفاسير: