Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

Numéro de la page:close

external-link copy
176 : 4

یَسْتَفْتُوْنَكَ ؕ— قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ— اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ— وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ— فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ— وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ— یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

(நபியே!) அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! கலாலா (-தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். பிள்ளை சந்ததி இல்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன் அவளுடைய அனைத்து சொத்திற்கும்) அவளுக்கு வாரிசாக ஆகிவிடுவான். ஆக, (பிள்ளை இல்லாமல் இறந்தவருக்கு உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக (அல்லது அதை விட அதிகமாக) இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் (பல சகோதர சகோதரிகள்) இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு (என்ற அடிப்படையில் சொத்து அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படும்). நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு (நீதமான சரியான சட்டங்களை) விவரிக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். (ஆகவே, அவனது சட்டத்தை ஏற்று திருப்தி பெறுங்கள்!) info
التفاسير: