Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

Numéro de la page:close

external-link copy
122 : 4

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟

எனினும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நாம் பிரவேசிக்க செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்? info
التفاسير:

external-link copy
123 : 4

لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ— مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ— وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟

(நம்பிக்கையாளர்களே! வெற்றி என்பது) உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவனுக்கு அதற்கு கூலி கொடுக்கப்படும். இன்னும், அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ அவன் காண மாட்டான். info
التفاسير:

external-link copy
124 : 4

وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟

இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
125 : 4

وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟

யார் அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைப்பாரோ (-அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடுவாரோ); - அவரோ நற்குணமுடையவராக இருக்கும் நிலையில், - இன்னும், இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியானவராக (இணைவைத்தலை விட்டு முற்றிலும் விலகியவராக) பின்பற்றுவாரோ அவரை விட மார்க்கத்தால் (-கொள்கையால்) மிக அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தனது) உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான். info
التفاسير:

external-link copy
126 : 4

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠

இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்த(றிப)வனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
127 : 4

وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ— قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ— وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ— وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟

(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றி, மார்க்கத் தீர்ப்பு கோருகிறார்கள். (நீர்) கூறுவீராக: “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும், வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் தீர்ப்பளிக்கிறது. அனாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளையும் இறந்தவருடைய சொத்தில் அவர்களுக்குரிய பாகங்களையும் சரியாக கொடுக்க வேண்டுமென்றும்), அனாதைகளுக்கு (மஹ்ர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்த வேண்டும் (என்றும் அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.” info
التفاسير: