Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

Numéro de la page:close

external-link copy
75 : 4

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ— وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ— وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ

அல்லாஹ்வுடைய பாதையிலும் (எதிரிகளால் அநீதி இழைக்கப்பட்ட, துன்புறத்தப்படுகிற) ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களுடைய பாதையிலும் (அவர்களை பாதுகாப்பதற்காக) நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள். எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (பலவீனமான) அவர்கள் (பிரார்த்தனையில்) கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
76 : 4

اَلَّذِیْنَ اٰمَنُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— وَالَّذِیْنَ كَفَرُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِیَآءَ الشَّیْطٰنِ ۚ— اِنَّ كَیْدَ الشَّیْطٰنِ كَانَ ضَعِیْفًا ۟۠

நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆக, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமானதாக இருக்கிறது! info
التفاسير:

external-link copy
77 : 4

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ— وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ— لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ— قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ— وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫— وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟

“உங்கள் கைகளை (போரிடுவதிலிருந்து) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்” என்று எவர்களுக்கு கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? ஆக, போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகிறார்கள். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மிக மேலானதாகும். (மறுமையில் நீங்கள்) ஒரு நூல் அளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
78 : 4

اَیْنَمَا تَكُوْنُوْا یُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِیْ بُرُوْجٍ مُّشَیَّدَةٍ ؕ— وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ؕ— قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— فَمَالِ هٰۤؤُلَآءِ الْقَوْمِ لَا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ حَدِیْثًا ۟

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! இன்னும், அவர்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகிறார்கள். (நபியே) நீர் கூறுவீராக: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன).” ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக (இலகுவாக) விளங்குவதில்லையே! info
التفاسير:

external-link copy
79 : 4

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ— وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ— وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟

“நன்மை எது உமக்கு ஏற்பட்டதோ, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. இன்னும், தீமை எது உமக்கு ஏற்பட்டதோ அது உம் புறத்திலிருந்து (உமது பாவத்தினால்) ஏற்பட்டது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பினோம். (உமது தூதுத்துவத்திற்கு) சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير: