Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

Numéro de la page:close

external-link copy
128 : 4

وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ— وَالصُّلْحُ خَیْرٌ ؕ— وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ— وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். (பெண்களின்) ஆன்மாக்கள் (தங்கள் கணவன் விஷயத்தில்) கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இன்னும், நீங்கள் (உங்கள் மனைவிகளுக்கு) நன்மை செய்தால், (அவர்கள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் இம்மை மறுமை வாழ்க்கையின் நன்மைக்கு அதுதான் மிகச் சிறந்த வழியாகும்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
129 : 4

وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ— وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

நீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். ஆகவே, (ஒருத்தியின் பக்கம் மட்டும்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். அ(ப்படி சாய்ந்து மற்ற)வளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டுவிடாதீர்கள்! இன்னும், நீங்கள் சமாதானம் செய்து (உங்கள் ஒழுக்கங்களையும் குணங்களையும் சீர்திருத்திக் கொண்டால்); இன்னும், (மனைவிகள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதுடன் உங்கள் மீது கருணை புரிந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
130 : 4

وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ— وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟

இன்னும், (சமாதானம் பலனளிக்காமல் கணவன், மனைவி) இருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
131 : 4

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ— وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். இன்னும், நீங்கள் நிராகரித்தால் (அது அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக (எத்தேவையுமற்றவனாக), பெரும் புகழுக்குரியவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
132 : 4

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟

இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! (படைப்புகளின் காரியங்களுக்கு) பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير:

external-link copy
133 : 4

اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟

மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான் (-அழித்துவிடுவான்). இன்னும், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
134 : 4

مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠

இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடுபவராக இருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் உலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது. (எனவே இரண்டையும் அவர் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான். info
التفاسير: