நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்துவிட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அ(து அழிந்த)தற்குப் பின்னர் அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
ஆக, (நபியே!) நிச்சயமாக நீர், (உமது) அழைப்பை இறந்தவர்களுக்கு கேட்கவைக்க முடியாது. இன்னும், செவிடர்களுக்கும் கேட்கவைக்க முடியாது, அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
இன்னும், குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நீர் செவியுறச் செய்ய முடியாது, நம்பிக்கை கொள்பவர்களுக்கே தவிர. ஆக, அவர்கள்தான் (முஸ்லிம்கள் - நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
அல்லாஹ்தான் உங்களை (இந்திரியம் என்ற) பலவீனமான ஒரு பொருளிலிருந்து படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள், “தாங்கள் சில மணி நேரமே அன்றி (மண்ணறையில்) தங்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் வாழும் போதும்) பொய் சொல்பவர்களாக இருந்தார்கள்.
கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கி இருந்தீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும், நீங்கள் (இந்த நாள் உண்மையில் நிகழும் என்பதை) அறியா(மலும் நம்பிக்கை கொள்ளா)தவர்களாக இருந்தீர்கள்.
ஆக, அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது.
இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். இன்னும், நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.