ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
150 : 7

وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ— قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ— اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ— وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ— قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ— فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

இன்னும், மூஸா கோபித்தவராக, ஆவேசப்பட்டவராக (வருத்தப்பட்டவராக) தன் சமுதாயத்திடம் திரும்பியபோது, “எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும் என் மார்க்கத்திலும்) நான் சென்றதற்குப் பிறகு நீங்கள் செய்தது மிகக் கெட்டதாகும். உங்கள் இறைவனின் கட்டளையை (மீறுவதில்) அவசரப்பட்டீர்களா?” என்று கூறினார். இன்னும், அந்த பலகைகளை எறிந்தார். இன்னும், தன் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை (முடி)யைப் பிடித்து, அவரைத் தன் பக்கம் இழுத்தார். அப்போது, (ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக (நமது) சமுதாயம் என்னை பலவீனப்படுத்திவிட்டனர். இன்னும், அவர்கள் என்னைக் கொன்றுவிடவும் முற்பட்டனர். ஆகவே, என் மூலம் எதிரிகளை நகைக்கச் செய்யாதீர். இன்னும், அநியாயக்கார மக்களுடன் என்னை சேர்த்துவிடாதீர்.” info
التفاسير:

external-link copy
151 : 7

قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ— وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠

(மூஸா) கூறினார்: “என் இறைவா! எனக்கும் என் சகோதரருக்கும் மன்னிப்பு வழங்கு! இன்னும், உன் கருணையில் எங்களை சேர்த்துக்கொள்! இன்னும், நீ கருணையாளர்களில் மகா கருணையாளன்!” info
التفاسير:

external-link copy
152 : 7

اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟

“நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் வந்தடையும். இன்னும், (பொய்யை) இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். info
التفاسير:

external-link copy
153 : 7

وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ— اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟

இன்னும், எவர்கள் தீமைகளை செய்து, பிறகு, அவற்றுக்குப் பின்னர் (வருந்தி) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, பாவமன்னிப்புக் கோரினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் பாவமன்னிப்பு கேட்ட)தற்குப் பின்னர் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
154 : 7

وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ— وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟

மூஸாவிற்கு கோபம் தணிந்தபோது அவர் அந்த பலகைகளை (கையில்) எடுத்தார். அவற்றில் எழுதப்பட்டதில் “தங்கள் இறைவனை பயப்படுகிறவர்களுக்கு நேர்வழியும் கருணையும் உண்டு.” info
التفاسير:

external-link copy
155 : 7

وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ— فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ— اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ— اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ— تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ— اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟

இன்னும், மூஸா தன் சமுதாயத்தில் எழுபது ஆடவர்களை நாம் குறிப்பிட்ட நேரத்திற்காக தேர்ந்தெடுத்(து அழைத்து வந்)தார். ஆக, அவர்களை இடிமுழக்கம் பிடித்தபோது, (மூஸா) கூறினார்: “என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்னரே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் அறிவீனர்கள் செய்ததற்காக எங்களை அழிப்பாயா? உன் சோதனையாகவே தவிர இது இல்லை. இதன் மூலம் நீ நாடியவர்களை வழி கெடுக்கிறாய்; இன்னும், நீ நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறாய். நீதான் எங்கள் பாதுகாவலன். ஆகவே, நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! இன்னும், எங்களுக்கு கருணை புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.” info
التفاسير: