ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
188 : 7

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۚ— وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ— اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.” info
التفاسير:

external-link copy
189 : 7

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ— فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ— فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟

அவன் ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான்; இன்னும், அவர் அவளுடன் நிம்மதியாக வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரி(ன் உடம்பி)லிருந்தே உருவாக்கினான். ஆக, அவளை அவர் (தன் உடலால்) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமாக கர்ப்பமானாள். அதை(ச் சுமந்து) கொண்டு நடந்தாள். அவள் (கர்ப்பம்) கனத்தபோது அவ்விருவரின் இறைவனான அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தனர்: “நீ எங்களுக்கு நல்ல குழந்தையைக் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம்.” info
التفاسير:

external-link copy
190 : 7

فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ— فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟

ஆக, அவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்ததில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். (இணைவைப்பவர்களான மக்காவாசிகளாகிய) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். (அவனோடு வணங்கப்பட யாருக்கும் எவ்வித தகுதியும் இல்லை.) info
التفاسير:

external-link copy
191 : 7

اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ۚ

எந்த ஒரு பொருளையும் படைக்காதவர்களை (அவனுக்கு) இணையாக்(கி வணங்)குகிறார்களா? (வணங்கப்படும்) அவர்களோ படைக்கப்படுகிறார்கள். (அவர்கள் எதையும் படைக்கவில்லை.) info
التفاسير:

external-link copy
192 : 7

وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟

இன்னும், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய இயலமாட்டார்கள். இன்னும், தங்களுக்கு தாமே (அவர்கள்) உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
193 : 7

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ— سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟

இன்னும், நீங்கள் அவர்களை (-அந்த சிலைகளை) நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் உங்களை பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைத்தாலும் அல்லது நீங்கள் வாய்மூடியவர்களாக இருந்தாலும் (அவ்விரண்டும்) உங்களுக்கு சமம்தான். (உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணானவை ஆகும். ஏனெனில், நீங்கள் அழைப்பவை பார்க்காது, செவியுறாது.) info
التفاسير:

external-link copy
194 : 7

اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்றே (அல்லாஹ்வின்) அடிமைகள் ஆவார்கள். (நீங்கள் கேட்டதை அவர்கள் உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்களும் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்)! info
التفاسير:

external-link copy
195 : 7

اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ— اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ— قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟

(சிலை வணங்கிகளே! நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ) அவர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பிடிப்பதற்கு அவர்களுக்கு கைகள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் செவியுறுவதற்கு அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?; (இவையெல்லாம் அவர்களுக்கு இருக்குமாயின் நீங்கள் வணங்கிய) உங்கள் தெய்வங்களிடம் பிரார்த்தித்து, பிறகு எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். ஆக, எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير: