ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
171 : 7

وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠

அவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்). info
التفاسير:

external-link copy
172 : 7

وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ— اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ— قَالُوْا بَلٰی ۛۚ— شَهِدْنَا ۛۚ— اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ

(நபியே!) இன்னும் உம் இறைவன் ஆதமின் சந்ததிகளில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை எடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. இன்னும், “நான் உங்கள் இறைவனாக இல்லையா?” (என்று வினவி) அவர்களை அவர்களுக்கே சாட்சியாக்கினான். “ஏன் இல்லை, (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி கூறினோம்” என்று (அவர்கள்) கூறினர். நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)தை விட்டு கவனமற்றவர்களாக இருந்தோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாமல் இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன் இதை நினைவூட்டுகிறான்). info
التفاسير:

external-link copy
173 : 7

اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ— اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟

அல்லது, இதற்கு முன்னர் இணைவைத்ததெல்லாம் எங்கள் மூதாதைகள்தான். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் (அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்ற) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) வீணர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா?” என்று கூறாதிருப்பதற்காக (இதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்). info
التفاسير:

external-link copy
174 : 7

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

இவ்வாறே, (அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும்) அவர்கள் (பாவங்களை விட்டு) திரும்புவதற்காகவும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம். info
التفاسير:

external-link copy
175 : 7

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟

(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை யாருக்கு கொடுத்தோமோ அவனுடைய செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழன்று கொண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். ஆக, அவன் வழிகெட்டவர்களில் (-மூடர்களில்) ஆகிவிட்டான். info
التفاسير:

external-link copy
176 : 7

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ— فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ— اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ— ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟

இன்னும், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர், அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரங்களை விவரிப்பீராக. info
التفاسير:

external-link copy
177 : 7

سَآءَ مَثَلَا ١لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟

நம் வசனங்களைப் பொய்ப்பித்து, தங்களுக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்த மக்களுடைய உதாரணம் (உதாரணத்தால்) மிகக் கெட்டதாகும். info
التفاسير:

external-link copy
178 : 7

مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். இன்னும், எவர்களை அவன் வழிகெடுக்கிறானோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்! info
التفاسير: