ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
150 : 7

وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ— قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ— اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ— وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ— قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ— فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

இன்னும், மூஸா கோபித்தவராக, ஆவேசப்பட்டவராக (வருத்தப்பட்டவராக) தன் சமுதாயத்திடம் திரும்பியபோது, “எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும் என் மார்க்கத்திலும்) நான் சென்றதற்குப் பிறகு நீங்கள் செய்தது மிகக் கெட்டதாகும். உங்கள் இறைவனின் கட்டளையை (மீறுவதில்) அவசரப்பட்டீர்களா?” என்று கூறினார். இன்னும், அந்த பலகைகளை எறிந்தார். இன்னும், தன் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை (முடி)யைப் பிடித்து, அவரைத் தன் பக்கம் இழுத்தார். அப்போது, (ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக (நமது) சமுதாயம் என்னை பலவீனப்படுத்திவிட்டனர். இன்னும், அவர்கள் என்னைக் கொன்றுவிடவும் முற்பட்டனர். ஆகவே, என் மூலம் எதிரிகளை நகைக்கச் செய்யாதீர். இன்னும், அநியாயக்கார மக்களுடன் என்னை சேர்த்துவிடாதீர்.” info
التفاسير: