Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif

Numero di pagina:close

external-link copy
49 : 2

وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟

இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்களுக்கு தீய தண்டனையால் கடும் சிரமம் (-துன்பம்) தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். இன்னும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். இன்னும், அதில் - உங்கள் இறைவனிடமிருந்து - ஒரு பெரிய சோதனை இருந்தது. info
التفاسير:

external-link copy
50 : 2

وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟

இன்னும், உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, உங்களைக் காப்பாற்றினோம். இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். info
التفاسير:

external-link copy
51 : 2

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟

இன்னும், மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களோ அநியாயக்காரர்களாக ஆகிவிட்ட நிலையில் - நீங்கள் ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். info
التفاسير:

external-link copy
52 : 2

ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை நாம் மன்னித்தோம். info
التفاسير:

external-link copy
53 : 2

وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟

இன்னும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவிற்கு வேதத்தையும், பிரித்தறிவிக்கக்கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்ததை நினைவு கூருங்கள். info
التفاسير:

external-link copy
54 : 2

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ— فَتَابَ عَلَیْكُمْ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟

இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு, “என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) மன்னிப்புக் கோரி உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள். இன்னும், உங்க(ளில் காளைக் கன்றை வணங்கியவர்க)ளுடைய உயிர்களைக் கொல்லுங்கள். அது, உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே, (நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்கியவர்களைக் கொன்றவுடன் அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன். info
التفاسير:

external-link copy
55 : 2

وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟

இன்னும் மூஸாவே! “அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ற நிலையில் பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது. (நீங்கள் இறந்து விட்டீர்கள்.) info
التفاسير:

external-link copy
56 : 2

ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) நாம் எழுப்பினோம். info
التفاسير:

external-link copy
57 : 2

وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

இன்னும், உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். இன்னும், மன்னு ஸல்வா (உண)வை உங்களுக்கு இறக்கி கொடுத்தோம். நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير: