Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif

Numero di pagina:close

external-link copy
275 : 2

اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ— وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ— فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ— وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

வட்டியைத் தின்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவது போன்றே தவிர (மறுமையில்) எழ மாட்டார்கள். அதற்கு காரணம், “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். ஆக, யார் தனது இறைவனிடமிருந்து உபதேசம் தனக்கு வந்த பிறகு, (வட்டியை விட்டு) அவர் விலகினால், (வட்டியில்) முன்னர் சென்றது (-வட்டி தடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் வாங்கிய வட்டி) அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்குப் பின்னரும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
276 : 2

یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟

அல்லாஹ் வட்டியை அழிப்பான். இன்னும், தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான ஒவ்வொருவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். info
التفاسير:

external-link copy
277 : 2

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
278 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

நம்பிக்கையாளர்களே! (உண்மையில்) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், வட்டியில் மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள். info
التفاسير:

external-link copy
279 : 2

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ— وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ ۚ— لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ۟

ஆக, (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) ஒரு போரை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. நீங்கள் (வட்டியைக் கேட்டு பிறருக்கு) அநீதி இழைக்காதீர்கள்; இன்னும், (உங்கள் அசல் தொகையை உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படாமல்) நீங்களும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
280 : 2

وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰی مَیْسَرَةٍ ؕ— وَاَنْ تَصَدَّقُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

இன்னும், வறியவர் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை (அவருக்கு) அவகாசமளித்தல் வேண்டும். இன்னும், (தர்மத்தின் நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அந்த வறியவருக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். info
التفاسير:

external-link copy
281 : 2

وَاتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟۠

இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير: