Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif

Numero di pagina:close

external-link copy
70 : 2

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ— اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ— وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟

(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் (பல வகைகளாக இருப்பதால் அவற்றில் எதை நாங்கள் அறுக்க வேண்டும் என்பதில் அவை) எங்களுக்கு குழப்பமாக (சந்தேகமாக) இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்.” info
التفاسير:

external-link copy
71 : 2

قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ— مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ— قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ— فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠

(மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசுவாகும். (அது) குறையற்றதாகும். அதில் வடு அறவே இல்லை” என்று அவன் கூறுகிறான்.. “நீர் இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்” என அவர்கள் கூறினார்கள். ஆக, (பல கேள்விகளுக்குப் பின்னர்) அவர்கள் அதை அறுத்தார்கள். ஆனால், (அதை) விரைவாக செய்ய அவர்கள் நெருங்கவில்லை. info
التفاسير:

external-link copy
72 : 2

وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ— وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ

இன்னும் நீங்கள் ஓர் உயிரைக் கொன்று பிறகு, அ(தை யார் கொன்றார் என்ப)தில் நீங்கள் தர்க்கித்ததை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன் ஆவான். info
التفاسير:

external-link copy
73 : 2

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

ஆக, “அதில் சில (பாகத்)தைக்கொண்டு (இறந்த) அவரை அடியுங்கள்” எனக் கூறினோம். இவ்வாறுதான், இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். இன்னும், நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். info
التفاسير:

external-link copy
74 : 2

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ— وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟

பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகி விட்டன. ஆக, அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. இன்னும் நிச்சயமாக கற்களில் நதிகள் பீறி(ட்டு ஓ)டக்கூடியவையும் திட்டமாக உண்டு. இன்னும் நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. இன்னும் நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (மேலிருந்து கிழே உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை. info
التفاسير:

external-link copy
75 : 2

اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

உங்களுக்காக அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதை நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகிறார்கள். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்களோ (தாம் செய்வது பாவம் என்பதை) அறிந்தவர்களாக இருந்த நிலையில் அதை தவறாக மாற்றுகிறார்கள். info
التفاسير:

external-link copy
76 : 2

وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

இன்னும் அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் “(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் (மற்ற) சிலருடன் தனி(மையில் சந்தி)த்து விட்டால் (அந்த சிலர் தங்களை சந்தித்தவர்களிடம்) கூறுகிறார்கள்: “உங்கள் இறைவனுக்கு முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?” info
التفاسير: