3.154. இந்த வேதனைக்கும் நெருக்கடிக்கும் பிறகு அல்லாஹ் உங்கள்மீது நிம்மதியையும் நம்பிக்கையையும் இறக்கினான். அதனால் உங்களில் அவனுடைய வாக்குறுதியை உறுதியாக நம்பியவர்களை -அவர்களது உள்ளங்களில் உள்ள அமைதியினால்- சிறு தூக்கம் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கு சிறு தூக்கமோ அமைதியோ ஏற்படவில்லை. அவர்கள்தாம் தங்களின் பாதுகாப்பு பற்றி மட்டுமே கவலைகொண்ட நயவஞ்சகர்கள். அவர்கள் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள். அல்லாஹ்வை மதிப்பிட வேண்டிய முறைப்படி மதிப்பிடாத இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள்போல அவன் தன் தூதருக்கோ அடியார்களுக்கோ உதவிபுரிய மாட்டான் என்று கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறியாத இந்த நயவஞ்சகர்கள், “போருக்குப் புறப்பட்டபோது எங்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் நாங்கள் வெளியேறியிருக்க மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதரே! இவர்களிடம் நீர் கூறுவீராக, “அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவனே தான் நாடியதைக் கட்டளையிடுகிறான், தான் நாடியதை விதிக்கிறான். அவன்தான் நீங்கள் போருக்குப் புறப்பட வேண்டும் என்று விதித்தவனும்.” இந்த நயவஞ்சகர்கள் தங்கள் உள்ளங்களில் உம்மிடம் வெளிப்படுத்தாத சந்தேகத்தையும் கெட்ட எண்ணத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “போருக்குப் புறப்படும் விஷயத்தில் எங்களின் ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் நாங்கள் இந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “கொலைக்களத்தினை விட்டு தூரமாக உங்களின் வீடுகளில் நீங்கள் தங்கியிருந்தாலும் உங்களில் யாருக்கு அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டானோ அவர் தான் கொலைசெய்யப்படும் இடத்தினை நோக்கி புறப்பட்டே இருப்பார். உங்களின் உள்ளங்களிலுள்ள எண்ணங்களையும் நோக்கங்களையும் சோதிப்பதற்காகவும் அதிலுள்ள ஈமானையும் நயவஞ்சகத்தையும் பிரித்துக்காட்டுவதற்காவும் அல்லாஹ் இவ்வாறு விதித்துள்ளான். தன் அடியார்களின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
3.156. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களான நயவஞ்சகர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் தமது உறவினர்களிடம், வாழ்வாதாரம் தேடி அல்லது போர்செய்வதற்காக பயணம் செய்து கொல்லப்பட்ட அல்லது இறந்தவர்களைக் குறித்து, “அவர்கள் புறப்படாமல் நம்மிடத்தில் இருந்திருந்தால், போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கவோ இறந்திருக்கவோ மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களது உள்ளங்களில் கைசேதமும் கவலையும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். தனது நாட்டத்தின் பிரகாரம் வாழ்வையும் மரணத்தையும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. அவன் தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவர்கள் வீட்டில் அமர்ந்திருப்பதால் விதியைத் தடுக்கவும் முடியாது. புறப்படுவதால் விரைவாக்கவும் முடியாது. உங்களின் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
3.157. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ இறந்தாலோ அவன் உங்களுக்கு பெரும் மன்னிப்பையும் தன் புறத்திலிருந்து அருளையும் வழங்குவான். அது இவ்வுலகம், இந்த உலக மக்கள் சேர்த்து வைக்கும் அனைத்தையும்விடச் சிறந்ததாகும்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• الجهل بالله تعالى وصفاته يُورث سوء الاعتقاد وفساد الأعمال.
1. அல்லாஹ்வைப் பற்றிய அறியாமை மனிதனிடம் தீய கொள்கையையும் மோசமான செயல்பாடுகளையும் உண்டாக்குகிறது.