3.101. நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கான மிகச் சிறந்த காரணியை நீங்கள் பெற்றிருந்தும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டபின் எவ்வாறு அவனை நிராகரிக்கிறீர்கள்?! அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காட்டப்படுகிறதே! அவனுடைய தூதர் முஹம்மது அவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறாரே! அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் யார் பற்றிப்பிடித்துக் கொண்டாரோ அவருக்கு கோணலற்ற நேரான பாதையின் பக்கம் அல்லாஹ் வழிகாட்டிவிட்டான்.
3.102. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் இறைவனை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். அது அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதாகும், அவ்வாறே மரணம் வரும் வரை உங்களுடைய மார்க்கத்தைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.
3.104. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் விரும்பும் நன்மைகளின்பால் அழைக்கக்கூடிய, மார்க்கம் கூறும் அறிவு ஏற்றுக்கொள்ளும் நன்மைகளைக் கொண்டு ஏவக்கூடிய, மார்க்கம் தடுத்த அறிவு வெறுக்கும் தீமைகளை விட்டும் தடுக்கக்கூடிய ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் முழுமையான வெற்றியைப் பெறக்கூடியவர்கள்.
3.105. நம்பிக்கையாளர்களே! முரண்பட்டுப் பல பிரிவினர்களாக பிரிந்துவிட்ட வேதக்காரர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து தெளிவான சான்றுகள் வந்தபின்னரும் அவர்கள் தங்கள் மார்க்கத்தில் முரண்பட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்விடம் கடும் வேதனை இருக்கின்றது.
3.106. மறுமைநாளில் இந்தக் கடும் வேதனையை அவர்கள் சந்திப்பார்கள். அப்போது நம்பிக்கையாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியால், நிம்மதியால் பொலிவாக இருக்கும். நிராகரிப்பாளர்களின் முகங்கள் துக்கத்தால், கவலையால் கருமையாக இருக்கும். அந்த நாளில் எவர்களது முகங்கள் கருத்துவிடுகிறதோ அவர்களிடம் கூறப்படும்: அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது என்று அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியையும் நம்பி எற்றுக்கொண்ட பிறகு நிராகரித்தீர்கள் அல்லவா? உங்களின் நிராகரிப்பின் காரணமாக அவன் உங்களுக்குத் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைச் சுவையுங்கள்.
3.108. தூதரே! அல்லாஹ்வின் வாக்குறுதிகளும் எச்சரிக்கைகளும் அடங்கிய வசனங்களை உண்மையான செய்திகளாவும் நீதிமிக்க சட்டங்களாகவும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். தன் படைப்புகளில் யாருக்கும் அல்லாஹ் அநீதியை விரும்பமாட்டான்.அவரவர் செய்த பாவத்திற்காகவே தவிர எவரையும் அவன் தண்டித்துவிட மாட்டான்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• متابعة أهل الكتاب في أهوائهم تقود إلى الضلال والبعد عن دين الله تعالى.
• الاعتصام بالكتاب والسُّنَّة والاستمساك بهديهما أعظم وسيلة للثبات على الحق، والعصمة من الضلال والافتراق.
2. குர்ஆனையும் சுன்னாவின் வழிகாட்டலையும் பற்றிப்பிடித்துக்கொள்வது சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கும் வழிகேடு, பிரிவினை ஆகியவற்றிலிருந்து காத்துக்கொள்வதற்குமான மிகச் சிறந்த வழிமுறையாகும்.
• الافتراق والاختلاف الواقع في هذه الأمة في قضايا الاعتقاد فيه مشابهة لمن سبق من أهل الكتاب.
3. இந்தச் சமூகம் கொள்கைரீதியான விஷயங்களில் கருத்துவேறுபடுவது முந்தைய வேதக்காரர்களுக்கு ஒப்பானதாகும்.
• وجوب الأمر بالمعروف والنهي عن المنكر؛ لأن به فلاح الأمة وسبب تميزها.
4. நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது கட்டாயக் கடமையாகும். இந்த சமூகத்தின் வெற்றியும் அதன் தனிச்சிறப்புக்கான காரணியும் இதில்தான் அடங்கியுள்ளது.