የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

அழ்ழுஹா

ከመዕራፉ ዓላማዎች:
بيان عناية الله بنبيه في أول أمره وآخره.
ஆரம்ப கட்டத்திலும் இறுதியிலும் தனது நபியைப் பற்றிய அல்லாஹ்வின் கவனத்தைத் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 93

وَالضُّحٰی ۟ۙ

93.1. அல்லாஹ் முற்பகலைக்கொண்டு சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
2 : 93

وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ

93.2. அவன் இரவைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். அது இருளாகி மக்கள் நடமாடுவதை விட்டும் ஓய்வெடுக்கும் போது, info
التفاسير:

external-link copy
3 : 93

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰی ۟ؕ

93.3. -தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை. info
التفاسير:

external-link copy
4 : 93

وَلَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰی ۟ؕ

93.4. என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும். info
التفاسير:

external-link copy
5 : 93

وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ

93.5. விரைவில் உம் இறைவன் உமக்கும் உம் சமூகத்திற்கும் அவன் கொடுத்ததைக்கொண்டு நீர் திருப்தியடையும் வகையில் பெரும் நன்மைகளை உமக்கும் உமது சமூகத்திற்கும் வழங்குவான். info
التفاسير:

external-link copy
6 : 93

اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟

93.6. நீர் அநாதையாக இருப்பதைக் கண்டு உமக்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினான். உம்மீது உம் பாட்டனார் அப்துல் முத்தலிபும் பின்னர் சிறிய தந்தை அபூதாலிபும் அன்பு செலுத்தினார்கள். info
التفاسير:

external-link copy
7 : 93

وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰی ۪۟

93.7. ஈமான் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறியாதவராக உம்மைக் கண்ட அவன், நீர் அறியாமல் இருந்தவற்றையெல்லாம் உமக்குக் கற்றுக் கொடுத்தான். info
التفاسير:

external-link copy
8 : 93

وَوَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰی ۟ؕ

93.8. உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, உம்மைத் வசதியுடையவராக ஆக்கினான். info
التفاسير:

external-link copy
9 : 93

فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْ ۟ؕ

93.9. ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர். info
التفاسير:

external-link copy
10 : 93

وَاَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْ ۟ؕ

93.10. தேவையோடு யாசிப்பவரை விரட்டிவிடாதீர். info
التفاسير:

external-link copy
11 : 93

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۟۠

93.11. அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவீராக. அவற்றை எடுத்துரைப்பீராக. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
1. தனது இறைவனிடம் நபியவர்களுக்குள்ள ஈடு இணையற்ற அந்தஸ்து. info

• شكر النعم حقّ لله على عبده.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அல்லாஹ்வுக்கு அடியான் செய்ய வேண்டிய கடமையாகும். info

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
3. பலவீனர்களுக்கு கருணை காட்டுதல் மற்றும் அவர்களுடன் மிருதுவாக நடப்பதன் அவசியம். info