Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫

அல்ஹுஜராத்

external-link copy
1 : 49

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
2 : 49

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِیِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! இன்னும், உங்களில் சிலர், சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக (அவருடன் மிக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்!). info
التفاسير:

external-link copy
3 : 49

اِنَّ الَّذِیْنَ یَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰی ؕ— لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟

நிச்சயமாக எவர்கள் தங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்கிறார்களோ - அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து (தேர்வு செய்து) இருக்கிறான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. info
التفاسير:

external-link copy
4 : 49

اِنَّ الَّذِیْنَ یُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟

நிச்சயமாக (நீர் தங்கி இருக்கிற) அறைகளுக்குப் பின்னால் இருந்து உம்மை சத்தமிட்டு அழைப்பவர்கள் - அவர்களில் அதிகமானவர்கள் (உங்கள் கண்ணியத்தை) புரியமாட்டார்கள். info
التفاسير: