Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫

அஷ்ஷூரா

external-link copy
1 : 42

حٰمٓ ۟ۚ

ஹா மீம். info
التفاسير:

external-link copy
2 : 42

عٓسٓقٓ ۟

அய்ன் சீன் காஃப். info
التفاسير:

external-link copy
3 : 42

كَذٰلِكَ یُوْحِیْۤ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۙ— اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

இவ்வாறுதான் மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அல்லாஹ் உமக்கு வஹ்யி அறிவிக்கிறான். இன்னும், உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் இவ்வாறுதான் வஹ்யி அறிவிக்கப்பட்டது. info
التفاسير:

external-link copy
4 : 42

لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குத்தான் சொந்தமானவை ஆகும். அவன்தான் மிக உயர்ந்தவன், மிக மகத்தானவன். info
التفاسير:

external-link copy
5 : 42

تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓىِٕكَةُ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِی الْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

அவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் அச்சத்தால்) பிளந்து தெரித்து விடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். info
التفاسير:

external-link copy
6 : 42

وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ اللّٰهُ حَفِیْظٌ عَلَیْهِمْ ۖؗ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟

அவனை அன்றி எவர்கள் பாதுகாவலர்களை (பிற தெய்வங்களை) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் மீது அல்லாஹ்தான் கண்காணிப்பவன் ஆவான். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் இல்லை. (ஆகவே, அல்லாஹ் அவர்களின் செயல்களைப் பதிவு செய்து அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.) info
التفاسير:

external-link copy
7 : 42

وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ— فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟

இவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அ(ந்த மறுமை நாள் நிகழப்போவ)தில் அறவே சந்தேகம் இல்லை. ஒரு பிரிவு சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு பிரிவு நரகத்தில் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
8 : 42

وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன், தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கிறான். அநியாயக்காரர்களோ - அவர்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
9 : 42

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۚ— فَاللّٰهُ هُوَ الْوَلِیُّ وَهُوَ یُحْیِ الْمَوْتٰی ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

அவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? ஆக, அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
10 : 42

وَمَا اخْتَلَفْتُمْ فِیْهِ مِنْ شَیْءٍ فَحُكْمُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبِّیْ عَلَیْهِ تَوَكَّلْتُ ۖۗ— وَاِلَیْهِ اُنِیْبُ ۟

எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்களோ அதன் இறுதி தீர்ப்பு அல்லாஹ்வின் பக்கம்தான் உள்ளது. அந்த அல்லாஹ்தான் என் இறைவன் ஆவான். அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் பக்கமே நான் முற்றிலும் திரும்புகிறேன். info
التفاسير: