Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫

Số trang:close

external-link copy
22 : 28

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟

மேலும், அவர் மத்யன் நகரத்தை நோக்கி முன்னேறி சென்றபோது கூறினார்: “என் இறைவன் நேரான பாதையில் என்னை நிச்சயமாக வழி நடத்துவான்.” info
التفاسير:

external-link copy
23 : 28

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬— وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ— قَالَ مَا خَطْبُكُمَا ؕ— قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ— وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟

அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற சில மக்களைக் கண்டார். அவர்கள் அல்லாமல் (தங்கள் ஆடுகளை மக்களின் ஆடுகளை விட்டும், அவை அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினார்கள்: “மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளுக்கு நீர் புகட்டிவிட்டு, அவற்றை இங்கிருந்து) வெளியேற்றாதவரை நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட இயலாது. இன்னும், எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.” info
التفاسير:

external-link copy
24 : 28

فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟

ஆக, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலி(ல் அமர்ந்து இளைப்பாறுவதற்காக அத)ன் பக்கம் திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளி!)” info
التفاسير:

external-link copy
25 : 28

فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ— قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ— فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ— قَالَ لَا تَخَفْ ۫— نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

ஆக, அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்துக் கொண்டு) வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்: “நீ எங்களுக்காக (எங்கள் கால் நடைகளுக்கு) நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார்.” ஆக, அவர் அவ(ளின் தந்தையா)ரிடம் வந்து, (தனது) சரித்திரத்தை அவருக்கு விவரித்தபோது, (அப்பெண்ணின் தந்தையாகிய) அவர் கூறினார்: “பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.” info
التفاسير:

external-link copy
26 : 28

قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ— اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟

அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! (நம்மிடம் வேலை செய்ய) அவரை கூலிக்கு அமர்த்துவீராக! நீர் கூலிக்கு அமர்த்துபவர்களில் சிறந்தவர் (யாரென்றால்), பலசாலி, நம்பிக்கையாளர் ஆவார். info
التفاسير:

external-link copy
27 : 28

قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ— فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟

அவர் கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்குக் கூலியாக (-மஹ்ராக) தரவேண்டும் என்ற நிபந்தனையின்படி நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத்தர விரும்புகிறேன். ஆக, நீர் பத்து ஆண்டுகளாக பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து நீர் செய்யும் உதவியாகும். நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய். info
التفاسير:

external-link copy
28 : 28

قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ— اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ— وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠

(மூஸா) கூறினார்: “எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் நாம் செய்த ஒப்பந்தமாகும் இது. இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் (அதைவிட அதிகம் என்னிடம் கேட்டு) என் மீது வரம்பு மீறுதல் கூடாது. இன்னும், நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.” info
التفاسير: