Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫

Số trang:close

external-link copy
191 : 2

وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ— وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ— فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ— كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟

இன்னும் (உங்களுடன் போர் செய்யும் மக்காவாசிகளாகிய) அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் கொல்லுங்கள். உங்களை அவர்கள் (மக்காவிலிருந்து) வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையை விட மிகக் கடுமையானது. (மக்காவில்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. ஆக, அவர்கள் உங்களிடம் போரிட்டால் அப்போது நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் (உங்களிடம் சண்டை செய்கிற அந்த) நிராகரிப்பவர்களின் கூலி இருக்கும். info
التفاسير:

external-link copy
192 : 2

فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால், (நீங்களும் அவர்களை விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
193 : 2

وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ— فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟

இன்னும், (மக்காவில்) இணைவைத்தல் நீங்கும் வரை, வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால் அப்போது அறவே தாக்குதல் (நிகழ்த்துவது) இல்லை, அநியாயக்காரர்கள் மீதே தவிர. info
التفاسير:

external-link copy
194 : 2

اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ— فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

புனித மாதம் புனித மாதத்திற்கு பதிலாகும். புனிதங்கள் (பாதுகாக்கப்பட வேண்டும். அவை பாழ்படுத்தப்பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்களை தாக்குவாரோ, அவர் உங்களை தாக்கியது போன்றே (நீங்களும்) அவரை தாக்குங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
195 : 2

وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۚ— وَاَحْسِنُوْا ۛۚ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟

இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான். info
التفاسير:

external-link copy
196 : 2

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

இன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் (மக்காவிற்கு யாத்திரை செல்லும்போது வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) இலகுவாகக் கிடைக்கின்ற ஒரு பிராணியை பலி கொடுங்கள். அந்த பலிப் பிராணி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலை(முடி)களை சிரைக்காதீர்கள். ஆக, உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு (பேன் அல்லது காயம் போன்ற சிரமம் தரும்) இடையூறு இருந்து, அதனால் அவர் தனது தலையை சிரைத்துவிடுவாரோ அவர் நோன்பு வைத்து; அல்லது, தர்மம் கொடுத்து; அல்லது, பலிப் பிராணியை அறுத்து பரிகாரம் செய்யவும். நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: