Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
30 : 9

وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ ١بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ— ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ— یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ— قَاتَلَهُمُ اللّٰهُ ۚ— اَنّٰی یُؤْفَكُوْنَ ۟

9.30. அனைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களே. யூதர்கள் உசைரை அல்லாஹ்வின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். கிருஸ்தவர்கள் மஸீஹ் ஈசாவை அல்லாஹ்வின் மகன் என்றுகூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். அவர்களது இந்த அவதூறு எவ்வித ஆதாரமுமின்றி அவர்களின் வாயினால் கூறிய ஒரு கூற்றே. அவர்கள் தமது இந்தக் கூற்றில் “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்களாவர் என்று” கூறிய அவர்களுக்கு முன்னிருந்த இணைவைப்பாளர்களின் கூற்றுக்கே ஒப்பாகின்றனர். இதனை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். இவ்வளவு தெளிவான சத்தியத்தை விட்டு அசத்தியத்தை நோக்கி எவ்வாறுதான் அவர்கள் திசைதிருப்பப்படுகிறார்களோ?! info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• في الآيات دليل على أن تعلق القلب بأسباب الرزق جائز، ولا ينافي التوكل.
1. வாழ்வாதாரத்தின் காரணிகளோடு உள்ளம் சம்பந்தப்படுவது ஆகுமானதே, இது அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கு எதிரானதுமல்ல என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும். info

• في الآيات دليل على أن الرزق ليس بالاجتهاد، وإنما هو فضل من الله تعالى تولى قسمته.
2. வாழ்வாதாரம் நம்முடைய முயற்சியைக் கொண்டு கிடைப்பதல்ல. அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனே அதனைப் பங்கிடுகிறான் என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும். info

• الجزية واحد من خيارات ثلاثة يعرضها الإسلام على الأعداء، يقصد منها أن يكون الأمر كله للمسلمين بنزع شوكة الكافرين.
3. எதிரிகளுக்கு முன்னால் வைக்கப்படும் மூன்று விஷயங்களில் ஜிஸ்யாவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நிராகரிப்பாளர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு அதிகாரம் முழுவதும் முஸ்லிம்களிடமே இருக்கின்றது என்ற விஷயம் உறுதிப்படுத்தப்படுகிறது. info

• في اليهود من الخبث والشر ما أوصلهم إلى أن تجرؤوا على الله، وتنقَّصوا من عظمته سبحانه.
4. யூதர்களிடமுள்ள தீயகுணம், அல்லாஹ்வின் மீதே துணிவு கொண்டு அவனது மகிமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுமளவுக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது. info