Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

Số trang:close

external-link copy
20 : 75

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ

75.20,21. ஒருபோதும் இல்லை. நீங்கள் வாதிடுவதுபோல மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியமற்ற விடயமல்ல. ஆரம்பத்தில் உங்களைப் படைத்தவன் நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக மீண்டும் உங்களைப் படைக்கும் ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். மாறாக விரைவாக அழிந்துவிடும் உலக வாழ்க்கையின்மீது நீங்கள் கொண்ட மோகமே நீங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பதற்கான காரணமாகும். info
التفاسير:

external-link copy
21 : 75

وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ

21. அல்லாஹ் உங்களுக்கு ஏவிய வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அவன் உங்களைத் தடுத்த காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்கும்படி சொல்லும் மறுமை வாழ்வை நீங்கள் விட்டதுமாகும். info
التفاسير:

external-link copy
22 : 75

وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ

75.22. அந்நாளில் சீதேவிகள், நம்பிக்கையாளர்களின் முகங்கள் பொலிவாக இருக்கும். info
التفاسير:

external-link copy
23 : 75

اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ

75.23. அவர்கள் தம் இறைவனைப் பார்த்து அதன் மூலம் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். info
التفاسير:

external-link copy
24 : 75

وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ بَاسِرَةٌ ۟ۙ

75.24. அந்நாளில் மூதேவிகள், நிராகரிப்பாளர்களின் முகங்கள் கடுகடுத்ததாக இருக்கும். info
التفاسير:

external-link copy
25 : 75

تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ

75.25. பெரும் தண்டனையும் நோவினைமிக்க வேதனையும் தங்கள் மீது இறங்கப்போகிறது என்பதை அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
26 : 75

كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ

75.26. தாங்கள் இறந்துவிட்டால் வேதனை செய்யப்பட மாட்டோம் என்று இணைவைப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். அவர்களில் யாருக்கேனும் உயிர் நெஞ்சின் மேற்பகுதியை அடைந்துவிட்டால் info
التفاسير:

external-link copy
27 : 75

وَقِیْلَ مَنْ ٚ— رَاقٍ ۟ۙ

75.27. மக்களில் சிலர் சிலரிடம் கூறுவார்கள்: “இவர் குணமடையும்பொருட்டு இவருக்கு மந்திரிப்பவர் யார்?” info
التفاسير:

external-link copy
28 : 75

وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ

75.28. மரண வலியில் இருப்பவர் அப்போது தாம் உலகை விட்டுப் பிரிந்து மரணிக்கப் போகின்றோம் என்பதை உறுதியாக அறிந்துகொள்வார். info
التفاسير:

external-link copy
29 : 75

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ

75.29. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை தொடங்கும் தருவாயில் துன்பங்கள் ஒன்றுசேர்ந்துவிடும். info
التفاسير:

external-link copy
30 : 75

اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمَسَاقُ ۟ؕ۠

75.30. இது நடந்துவிட்டால் இறந்தவர் தன் இறைவனின்பால் இழுத்துச் செல்லப்படுவார். info
التفاسير:

external-link copy
31 : 75

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ

75.31. நிராகரிப்பாளன் தூதர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவுமில்லை; அல்லாஹ்வுக்காக தொழவுமில்லை. info
التفاسير:

external-link copy
32 : 75

وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ

75.32. ஆனால் தூதர் கொண்டுவந்ததை பொய்யெனக் கூறி அதனைப் புறக்கணித்தான். info
التفاسير:

external-link copy
33 : 75

ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ

75.33. பின்னர் இந்த நிராகரிப்பாளன் கர்வத்துடன் நடந்தவாறே தன் குடும்பத்தை நோக்கிச் செல்கிறான். info
التفاسير:

external-link copy
34 : 75

اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ

75.34. எனவே அல்லாஹ் நிராகரிப்பாளனுக்கு அவனது வேதனை அவனை நெருங்கிவிட்டதாக எச்சரித்தான். info
التفاسير:

external-link copy
35 : 75

ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ

75.35. பின்னர் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அதே வசனத்தை திரும்பக் கூறினான். அவன் கூறுகிறான்: (பின்னரும், அழிவு உனக்கு நெருக்கமாகிவிட்டது, நெருக்கமாகிவிட்டது). info
التفاسير:

external-link copy
36 : 75

اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ

75.36. அல்லாஹ் மனிதனுக்கு எந்த சட்டதிட்டத்தையும் கட்டளையிடாமல் அவனை அப்படியே விட்டுவிடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா? info
التفاسير:

external-link copy
37 : 75

اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ

75.37. இந்த மனிதன் ஒருநாள் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்தாக இருக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
38 : 75

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ

75.38. அவ்வாறு இருந்ததன் பின் அவன் உறைந்த இரத்தக்கட்டியாகி விடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனைப் படைத்தான். அவனது படைப்பை செம்மையாக ஆக்கினான். info
التفاسير:

external-link copy
39 : 75

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ؕ

75.39. அவனுடைய இனத்திலிருந்தே அவன் ஆண், பெண் என்ற இரு வகையினரை ஏற்படுத்தவில்லையா? info
التفاسير:

external-link copy
40 : 75

اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠

75.40. இவ்வாறு மனிதனை விந்து மற்றும் அட்டையிலிருந்து படைத்தவன் அவன் இறந்தபிறகு விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றல் பெற்றவன் இல்லையா? ஏனில்லை. நிச்சயமாக அவன் அதற்கு ஆற்றலுடையவன். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• خطر حب الدنيا والإعراض عن الآخرة.
1. உலகின்மீது மோகம்கொண்டு மறுமையைப் புறக்கணிப்பதன் விபரீதம். info

• ثبوت الاختيار للإنسان، وهذا من تكريم الله له.
2. மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இது அல்லாஹ் மனிதனுக்கு அளித்த கண்ணியமாகும். info

• النظر لوجه الله الكريم من أعظم النعيم.
3. அல்லாஹ்வின் திருமுகத்தைப் பார்ப்பது மிகப் பெரும் இன்பங்களில் ஒன்றாகும். info