Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
7 : 71

وَاِنِّیْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِیَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۟ۚ

71.7. உன்னை மட்டுமே வணங்கி, உனக்கும் உனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களின் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதற்கு நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் என் அழைப்பை செவியுறாமல் தடுக்கும்பொருட்டு தங்களின் விரல்களால் காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். என்னைப் பார்க்காமல் இருக்கும்பொருட்டு தங்களின் ஆடைகளால் முகங்களை மூடிக் கொண்டார்கள். தாங்கள் இருந்துகொண்டிருக்கும் இணைவைப்பிலேயே அவர்கள் நிலைத்திருந்தார்கள். நான் அவர்களை எதனை நோக்கி அழைத்தேனோ அதனை ஏற்றுக் கட்டுப்படுவதை விட்டும் கர்வம் கொண்டார்கள். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• خطر الغفلة عن الآخرة.
1. மறுமையை மறந்து அலட்சியமாக இருப்பதன் ஆபத்து. info

• عبادة الله وتقواه سبب لغفران الذنوب.
2. அல்லாஹ்வை வணங்குவதும் அவனை அஞ்சுவதும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. info

• الاستمرار في الدعوة وتنويع أساليبها حق واجب على الدعاة.
3. அழைப்புப் பணியில் நிலைத்திருப்பதும் அதில் பலவகையான வழிமுறைகளைக் கையாளுவதும் அழைப்பாளர்களின் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். info