Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
12 : 6

قُلْ لِّمَنْ مَّا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلْ لِّلّٰهِ ؕ— كَتَبَ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ؕ— لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

6.12. தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்கள், பூமி, அவையிரண்டிற்கு இடையில் உள்ளவை ஆகியவற்றின் உரிமை யாருக்குரியது? நீர் கூறுவீராக: அனைத்தின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியது. அடியார்கள் மீது அருள் புரிவதற்காக கருணையை தன்மீது விதித்துக் கொண்டான். எனவேதான் அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• بيان حكمة الله تعالى في إرسال كل رسول من جنس من يرسل إليهم؛ ليكون أبلغ في السماع والوعي والقبول عنه.
1. அல்லாஹ் தூதர்களை மனித இனத்திலிருந்தே அனுப்பியதன் நோக்கம், அவர்கள் சிறந்த முறையில் செவியேற்று, புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. info

• الدعوة للتأمل في أن تكرار سنن الأوّلين في العصيان قد يقابله تكرار سنن الله تعالى في العقاب.
2. இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றினால் சில வேளை தண்டனையிலும் அல்லாஹ்வின் வழிமுறை நடைபெறும் என்பதைச் சிந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. info

• وجوب الخوف من المعصية ونتائجها.
3. பாவத்தைக் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் அஞ்சுவது கடமையாகும். info

• أن ما يصيب البشر من بلاء ليس له صارف إلا الله، وأن ما يصيبهم من خير فلا مانع له إلا الله، فلا رَادَّ لفضله، ولا مانع لنعمته.
4. மனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் போக்க முடியாது. அவனுக்குக் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாரும் இல்லை. info