Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

Số trang:close

external-link copy
7 : 54

خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ

54.7. அப்போது அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்கள் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டவர்களாக விசாரணை செய்யப்படும் இடத்தை நோக்கி பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளிகளைப்போன்று விரைந்து வருவார்கள். info
التفاسير:

external-link copy
8 : 54

مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ— یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟

54.8. அந்த இடத்தின்பால் அழைக்கும் அழைப்பாளரை நோக்கி விரைந்து வருவார்கள். அந்நாளில் உள்ள கடினம் மற்றும் பயங்கரங்களின் காரணமாக நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இன்றைய நாள் கடினமான நாளாயிற்றே!” info
التفاسير:

external-link copy
9 : 54

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟

54.9. -தூதரே!- உம் அழைப்பை பொய்ப்பிக்கும் இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினரும் பொய்ப்பித்தனர். நம்முடைய அடியார் நூஹை நாம் அவர்களிடம் அனுப்பியபோது அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். அவரைப் பைத்தியக்காரர் என்று கூறி பலவாறு ஏசி விரட்டி அவர்களுக்கு அழைப்புப் பிரச்சாரம் செய்வதை விட்டுவிடுமாறு அச்சுறுத்தலும் விடுத்தனர். info
التفاسير:

external-link copy
10 : 54

فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟

54.10. நூஹ் தம் இறைவனிடம் பின்வருமாறு கூறி பிரார்த்தித்தார்: ” நிச்சயமாக என் சமூகம் என்னை மிகைத்துவிட்டது. அவர்கள் என் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. எனவே அவர்கள்மீது தண்டனையை இறக்கி எனக்கு உதவி புரிவாயாக. info
التفاسير:

external-link copy
11 : 54

فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ

54.11. நாம் இடைவிடாமல் கொட்டும் மழை நீரால் வானத்தின் கதவுகளைத் திறந்துவிட்டோம். info
التفاسير:

external-link copy
12 : 54

وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ

54.12. பூமியைப் பொங்கச் செய்தோம். அதிலிருந்து நீருற்றுகள் வெளிப்பட்டன. வானத்திலிருந்து பொழிந்த நீரும் பூமியிலிருந்து பொங்கிய நீரும் அல்லாஹ் முதலிலேயே விதித்த விஷயத்திற்காக ஒன்றுசேர்ந்து கொண்டது. அல்லாஹ் காப்பாற்றியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டார்கள். info
التفاسير:

external-link copy
13 : 54

وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ

54.13. பலகைகளாலும் ஆணிகளாலும் செய்யப்பட்ட கப்பலில் நாம் நூஹை ஏற்றிச் சென்றோம். அவரையும் அவருடன் உள்ளவர்களையும் மூழ்காமல் காப்பாற்றினோம். info
التفاسير:

external-link copy
14 : 54

تَجْرِیْ بِاَعْیُنِنَا جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟

54.14. அந்தக் கப்பல் நம் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் அலைகள் மோதிக்கொள்ளக்கூடிய தண்ணீரில் சென்றது. நூஹை பொய்ப்பித்து அவர் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்ததை பொய்ப்பித்த மக்களைத் தண்டித்து நூஹுக்கு உதவி செய்தான். info
التفاسير:

external-link copy
15 : 54

وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟

54.15. நாம் அவர்களைத் தண்டித்த இந்த தண்டனையை படிப்பினைக்காகவும் அறிவுரை பெறும் பொருட்டும் விட்டு வைத்துள்ளோம். அதைக்கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா? info
التفاسير:

external-link copy
16 : 54

فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟

54.16. பொய்ப்பிப்பாளர்களுக்கு நான் அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களை அழிப்பதற்கு நான் அளித்த எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? info
التفاسير:

external-link copy
17 : 54

وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟

54.17. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா? info
التفاسير:

external-link copy
18 : 54

كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟

54.18. ஆத் சமூகத்தினர் தங்களின் நபி ஹூதை நிராகரித்தார்கள். -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? ஏனையவர்களை தண்டிப்பதற்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். info
التفاسير:

external-link copy
19 : 54

اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ

54.19. நிச்சயமாக நாம் அவர்களின்மீது மோசமான அவர்கள் நரகில் நுழையும் வரைக்கும் அவர்களுடனிருக்கும் கெடுதி, துர்பாக்கியம் மிக்க நாளில் கடும் குளிர்காற்றை அனுப்பினோம். info
التفاسير:

external-link copy
20 : 54

تَنْزِعُ النَّاسَ ۙ— كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟

54.20. அது வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரங்களைப்போல மக்களை பூமியிலிருந்து தலைகுப்புற அடியோடு தூக்கி வீசியது. info
التفاسير:

external-link copy
21 : 54

فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟

54.21. -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஏனையோருக்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள். info
التفاسير:

external-link copy
22 : 54

وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠

54.22. நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா? info
التفاسير:

external-link copy
23 : 54

كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟

54.23. ஸமூத் சமூகத்தினர் தங்கள் தூதர் ஸாலிஹின் எச்சரிக்கையை பொய்ப்பித்தார்கள். info
التفاسير:

external-link copy
24 : 54

فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ— اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟

54.24. அவர்கள் மறுத்தவர்களாக கூறினார்கள்: “நம்மைப்போன்று ஒரு மனிதனை நாம் பின்பற்றுவதா? நாம் இந்த நிலையில் நிச்சயமாக அவரைப் பின்பற்றினால் சரியானதை விட்டும் தடம்புரண்டு தூரமாகவும் சிரமத்திலும் இருப்பவர்களாகி விடுவோம் info
التفاسير:

external-link copy
25 : 54

ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟

54.25. நம் அல்லாத அனைவரையும் தவிர்த்து அவர்மீது மட்டும்தான் வஹி இறக்கப்படுகிறதா? இல்லை, மாறாக அவர் பொய்யராகவும் ஆணவம் கொண்டவராகவும் இருக்கின்றார். info
التفاسير:

external-link copy
26 : 54

سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟

54.26. மறுமை நாளில் யார் பொய்யர், ஆணவம் கொண்டவர் ஸாலிஹா அவர்களா? என்பதை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
27 : 54

اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ

54.27. நிச்சயமாக நாம் அவர்களைச் சோதிக்கும்பொருட்டு பாறையிலிருந்து ஒரு பெண் ஒட்டகத்தை வெளிப்படுத்துவோம். -ஸாலிஹே!- அவர்கள் அதனுடன் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்பீராக. அவர்கள் அளிக்கும் தொல்லைகளை பொறுத்துக் கொள்வீராக. info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• مشروعية الدعاء على الكافر المصرّ على كفره.
1. நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கும் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம். info

• إهلاك المكذبين وإنجاء المؤمنين سُنَّة إلهية.
2. பொய்ப்பிப்பாளர்களை அழிப்பதும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவதும் இறைவனின் நியதியாகும். info

• تيسير القرآن للحفظ وللتذكر والاتعاظ.
3. குர்ஆன் மனனம் செய்வதற்கும் அறிவுரை, படிப்பினை பெறுவதற்கும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. info