Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
3 : 4

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ— فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ

4.3. உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்து, அவர்களுக்குரிய மணக்கொடையை குறைத்துவிடுவதனாலோ அல்லது மோசமாக நடந்துகொள்ளுவதனாலோ நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் அவர்களை விட்டுவிட்டு மற்ற பெண்களில் நீங்கள் விரும்பியவர்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். அவர்களிடையே உங்களால் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒருத்தியை மட்டும் போதுமாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடிமைப் பெண்களுக்கு மனைவிகளுக்குரிய உரிமைகள் அவசியமற்றது. அநாதைகளுடைய விடயமாகவும் ஒரு திருமணம் முடித்துக் கொள்வது அல்லது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களைஅனுபவிப்பது சம்பந்தமாகவும் வசனங்களில் இடம்பெற்ற இந்த விடயங்களே நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிக நெருக்கமானதாகும். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• الأصل الذي يرجع إليه البشر واحد، فالواجب عليهم أن يتقوا ربهم الذي خلقهم، وأن يرحم بعضهم بعضًا.
1. மனித இனத்தின் மூலம் ஒருவர்தான். எனவே அவர்கள் தங்களைப் படைத்த இறைவனான அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஒருவருக்கொருவர் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும். info

• أوصى الله تعالى بالإحسان إلى الضعفة من النساء واليتامى، بأن تكون المعاملة معهم بين العدل والفضل.
2. பலவீனமான பெண்கள், அநாதைகள் விஷயத்தில் நியாயமாகவும் நல்லமுறையிலும் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் அறிவுறுத்துகிறான். info

• جواز تعدد الزوجات إلى أربع نساء، بشرط العدل بينهن، والقدرة على القيام بما يجب لهن.
3. ஒரு ஆண் நான்கு பெண்கள்வரை மணமுடித்துக் கொள்ளலாம். ஆனால் அவன் அவர்களிடையே நியாயமாக நடந்துகொள்பவனாகவும் அவர்களைப் பராமரிக்கும் அளவு சக்தியுடையவனாகவும் இருக்க வேண்டும். info

• مشروعية الحَجْر على السفيه الذي لا يحسن التصرف، لمصلحته، وحفظًا للمال الذي تقوم به مصالح الدنيا من الضياع.
4. செல்வங்களைப் பராமரிக்கத் தெரியாதவரின் நலனை கருத்தில்கொண்டும் உலக நலவுகள் நிறைவேறுவதற்குத் தேவையான பணம் வீணாகுவதைத் தடுக்கும் பொருட்டும் அவர் மீது பணத்தைக் கையாள்வதற்குத் தடை விதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. info