Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
248 : 2

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠

2.248. அவர்களின் தூதர் கூறினார்: அவர்தான் உங்களுக்கு அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம், இஸ்ராயீலின் மக்கள் புனிதமாக கருதிவந்த, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்டியை அல்லாஹ் உங்களுக்குத் திரும்பத் தருவதாகும். அதில் நிம்மதியும் மூசா மற்றும் ஹாரூனின் வழிவந்தவர்கள் விட்டுச் சென்ற தடி, சில ஏடுகள் போன்றவையும் இருக்கும். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் தெளிவான சான்று இருக்கின்றது. info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• التنبيه إلى أهم صفات القائد التي تؤهله لقيادة الناس؛ وهي العلم بما يكون قائدًا فيه، والقوة عليه.
1. தலைமை வகிக்கும் விடயத்தைப் பற்றிய அறிவும் அதற்குரிய பலமும் மக்களை வழிநடத்தும் தகுதியுடைய தலைவருக்கான மிக முக்கியமான பண்புகளாகும். info

• إرشاد من يتولى قيادة الناس إلى ألا يغتر بأقوالهم حتى يبلوهم، ويختبر أفعالهم بعد أقوالهم.
2. தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் மக்களை செயல்பாடுகளைக் கொண்டு பரீட்சிக்க முன் அவர்களின் பேச்சை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. info

• أن الاعتبارات التي قد تشتهر بين الناس في وزن الآخرين والحكم عليهم قد لا تكون هي الموازين الصحيحة عند الله تعالى، بل هو سبحانه يصطفي من يشاء من خلقه بحكمته وعلمه.
3. பிறரை மதிப்பீடு செய்வதற்கு மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாகக் கருதப்படும் அளவீடுகள் சில வேளை அல்லாஹ்விடத்தில் சரியான அளவீடாகக் கருதப்படமாட்டாது. அல்லாஹ் தனது ஞானம் மற்றும் அறிவு ஆகிவற்றுக்கு ஏற்ப தான் நாடுவோரை தெரிவுசெய்கிறான். info