Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an

external-link copy
33 : 16

هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ اَمْرُ رَبِّكَ ؕ— كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

16.33. பொய்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் திடீரென மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் இவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு இவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது இவ்வுலகில் அவர்களை அடியோடு அழிக்கக் கூடிய வேதனையைத் தாங்கிய அல்லாஹ்வின் கட்டளையையா? மக்காவின் இந்த இணைவைப்பாளர்கள் செய்வதைப் போன்றே முன்னர் வாழ்ந்த இணைவைப்பாளர்களும் செய்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். அவன் அவர்களை அழித்து அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• فضيلة أهل العلم، وأنهم الناطقون بالحق في الدنيا ويوم يقوم الأشهاد، وأن لقولهم اعتبارًا عند الله وعند خلقه.
1. அறிஞர்களின் சிறப்பு தெளிவாகிறது. அவர்கள் இவ்வுலகிலும் சாட்சிகள் நிலை பெறும் மறுமை நாளிலும் சத்தியத்தைக் கொண்டு பேசுவார்கள். அவர்களின் வார்த்தைக்கு அல்லாஹ்விடத்திலும் படைப்புகளிடத்திலும் மதிப்பு உண்டு. info

• من أدب الملائكة مع الله أنهم أسندوا العلم إلى الله دون أن يقولوا: إنا نعلم ما كنتم تعملون، وإشعارًا بأنهم ما علموا ذلك إلا بتعليم من الله تعالى.
2. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நாங்கள் அறிவோம் என்று வானவர்கள் கூறாமல் அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான் எனக் கூறியமை அல்லாஹ்வுடன் அவர்கள் பேணும் ஒழுக்கமாகும். நிச்சயமாக அதை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர அவர்கள் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் விதமாகவே அவ்வாறு கூறுகின்றனர். info

• من كرم الله وجوده أنه يعطي أهل الجنة كل ما تمنوه عليه، حتى إنه يُذَكِّرهم أشياء من النعيم لم تخطر على قلوبهم.
3. சுவனவாதிகள் ஆசைவைக்கும் அனைத்தையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்குவது அவனது கொடையாகும். எந்தளவுக்கெனில் அவர்களது உள்ளங்களில் தோன்றாத இன்பங்களையும் அவர்களுக்கு அவன் நினைவூட்டுவான். info

• العمل هو السبب والأصل في دخول الجنة والنجاة من النار، وذلك يحصل برحمة الله ومنَّته على المؤمنين لا بحولهم وقوتهم.
4. சுவனத்தில் நுழைவதற்கும் நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் அடிப்படையும் காரணமாக அமைவதும் செயல்களே. அது நம்பிக்கையாளர்களின் மீது அல்லாஹ் காட்டும் கருணையினாலும் அருளினாலுமே ஏற்படுமே அன்றி அவர்களது பலத்தினாலோ ஆற்றலினாலோ அல்ல. info