Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 阿卜杜·哈米德·巴格卫

Số trang:close

external-link copy
96 : 7

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

96. அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். info
التفاسير:

external-link copy
97 : 7

اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ

97. (நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? info
التفاسير:

external-link copy
98 : 7

اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟

98. அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? info
التفاسير:

external-link copy
99 : 7

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ— فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠

99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
100 : 7

اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ— وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟

100. பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
101 : 7

تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟

101. (நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். info
التفاسير:

external-link copy
102 : 7

وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ— وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟

102. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம். info
التفاسير:

external-link copy
103 : 7

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟

103. இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. info
التفاسير:

external-link copy
104 : 7

وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

104. மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார். info
التفاسير: