Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 阿卜杜·哈米德·巴格卫

Số trang:close

external-link copy
53 : 3

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

53. ‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.) info
التفاسير:

external-link copy
54 : 3

وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ— وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠

54. (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன். info
التفاسير:

external-link copy
55 : 3

اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟

55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.) info
التفاسير:

external-link copy
56 : 3

فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ— وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

56. ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
57 : 3

وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

57. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. info
التفاسير:

external-link copy
58 : 3

ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟

58. (நபியே!) நாம் உம் மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
59 : 3

اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ— خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

59. நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து (மனிதனாக) ‘ஆகு' என்று கூறினான். உடனே (அப்படி) ஆகிவிட்டது. info
التفاسير:

external-link copy
60 : 3

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟

60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம். info
التفاسير:

external-link copy
61 : 3

فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫— ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟

61. (நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை.) info
التفاسير: