แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ - อุมัร ชะรีฟ

หมายเลข​หน้า​:close

external-link copy
73 : 9

یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

நபியே! நிராகரிப்பவர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் போரிடுவீராக. இன்னும், அவர்களிடம் கடுமை காட்டுவீராக. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். மீளுமிடத்தால் அது மிகக் கெட்டதாகும். info
التفاسير:

external-link copy
74 : 9

یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ— وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ— وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ— فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ— وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

(தூதருக்கு எதிராக ஏதும்) அவர்கள் கூறவில்லை என்று அல்லாஹ் மீது (நயவஞ்சகர்கள்) சத்தியமிடுன்றனர். இன்னும், திட்டவட்டமாக நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறினார்கள். அவர்கள் இஸ்லாமை ஏற்றதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது, தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது, அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அவர்களை துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அல்லாஹ் தண்டிப்பான். இந்த பூமியில் அவர்களுக்கு (எந்த) பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், உதவியாளர் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
75 : 9

وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ ۟

இன்னும், “அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; இன்னும், நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தவர்களும் அவர்களில் உண்டு. info
التفاسير:

external-link copy
76 : 9

فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟

ஆக, அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். இன்னும், (தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றாது) விலகிவிட்டனர். அவர்கள் (எப்போதும் தாங்கள் வாக்குறுதிகளை) புறக்கணிப்பவர்களே. info
التفاسير:

external-link copy
77 : 9

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟

ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கின்ற நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தையே முடிவாக (இறுதி வரை) அல்லாஹ் ஆக்கினான். info
التفاسير:

external-link copy
78 : 9

اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُیُوْبِ ۟ۚ

“நிச்சயமாக அவர்களின் இரகசியத்தையும்; இன்னும், அவர்களின் பேச்சையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிகமிக அறிந்தவன் என்பதையும்” அவர்கள் அறியவில்லையா? info
التفاسير:

external-link copy
79 : 9

اَلَّذِیْنَ یَلْمِزُوْنَ الْمُطَّوِّعِیْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیْنَ لَا یَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَیَسْخَرُوْنَ مِنْهُمْ ؕ— سَخِرَ اللّٰهُ مِنْهُمْ ؗ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

(நயவஞ்சக்காரர்களான) அவர்கள், உபரியாக தர்மம் செய்கின்ற நம்பிக்கையாளர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் (அவர்கள் செய்கின்ற) தர்மங்கள் விஷயத்தில் குறை கூறி குத்திப் பேசுகிறார்கள். இன்னும் அவர்களை கேலி செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும் துன்புறுத்தக்கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு. info
التفاسير: