แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ - อุมัร ชะรีฟ

அத்தலாக்

external-link copy
1 : 65

یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ— وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ— لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُیُوْتِهِنَّ وَلَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— لَا تَدْرِیْ لَعَلَّ اللّٰهَ یُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ۟

நபியே! (நபியின் சமுதாய மக்களே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும், இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் – வரும் வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் (தாமாக) வெளியேற வேண்டாம், (விபச்சாரம் என்ற) தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. (அப்போது நீங்கள் அவர்களை வெளியேற்றலாம்.) இவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள்! அப்போது இத்தா முடிந்து விட்டாலும் அவர்கள் மீண்டும் திருமண ஒப்பந்தம் செய்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.) info
التفاسير: