แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ - อุมัร ชะรีฟ

หมายเลข​หน้า​:close

external-link copy
71 : 15

قَالَ هٰۤؤُلَآءِ بَنَاتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ

லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).” info
التفاسير:

external-link copy
72 : 15

لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟

(நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
73 : 15

فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ

ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது. info
التفاسير:

external-link copy
74 : 15

فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ

ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; info
التفاسير:

external-link copy
75 : 15

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟

படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
76 : 15

وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟

இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது. info
التفاسير:

external-link copy
77 : 15

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ

நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
78 : 15

وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ

மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
79 : 15

فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ— وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠

ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன. info
التفاسير:

external-link copy
80 : 15

وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ

மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள். info
التفاسير:

external-link copy
81 : 15

وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ

இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
82 : 15

وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟

மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர். info
التفاسير:

external-link copy
83 : 15

فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ

ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது. info
التفاسير:

external-link copy
84 : 15

فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ

ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை. info
التفاسير:

external-link copy
85 : 15

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ— وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟

மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக. info
التفاسير:

external-link copy
86 : 15

اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟

நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
87 : 15

وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟

இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
88 : 15

لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟

இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!). info
التفاسير:

external-link copy
89 : 15

وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ

இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
90 : 15

كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ

(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்). info
التفاسير: