แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม)

external-link copy
95 : 3

قُلْ صَدَقَ اللّٰهُ ۫— فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

3.95. தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் யஃகூபைக் குறித்து அறிவித்ததிலும் அவன் இறக்கியவற்றிலும் சட்டமாக்கியவற்றிலும் உண்மையே கூறினான். ஆகவே இப்ராஹீமின் மார்க்கத்தையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிலகி இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக சாய்ந்தவராகவும் அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் எதனையும் இணைகற்பிக்காதவராகவும் இருந்தார். info
التفاسير:
ประโยชน์​ที่​ได้รับ​:
• كَذِبُ اليهود على الله تعالى وأنبيائه، ومن كذبهم زعمهم أن تحريم يعقوب عليه السلام لبعض الأطعمة نزلت به التوراة.
1. யூதர்கள் அல்லாஹ்வின் மீதும்அவனுடைய தூதர்களின் மீதும் ஏராளமான பொய்களைப் புனைந்துள்ளார்கள். சில உணவுகளை யஃகூப் (அலை) அவர்கள் தமக்குத்தாமே விலக்கிக்கொண்டதும் தவ்ராத்தில் இறங்கியதே எனக் கூறியதும் அந்தப்பொய்களில் ஒன்றே. info

• أعظم أماكن العبادة وأشرفها البيت الحرام، فهو أول بيت وضع لعبادة الله، وفيه من الخصائص ما ليس في سواه.
2. வழிபாட்டுத்தளங்களில் மிக முக்கியமானதும் மிகச் சிறந்ததும் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமாகும். இதுதான் அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். இங்கு ஏனைய பள்ளிவாயில்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் உள்ளன. info

• ذَكَرَ الله وجوب الحج بأوكد ألفاظ الوجوب تأكيدًا لوجوبه.
3. ஹஜ்ஜின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக அது கடமை என்பதை மிக உறுதியான வார்த்தைகளினால் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். info