แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม)

external-link copy
72 : 22

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعْرِفُ فِیْ وُجُوْهِ الَّذِیْنَ كَفَرُوا الْمُنْكَرَ ؕ— یَكَادُوْنَ یَسْطُوْنَ بِالَّذِیْنَ یَتْلُوْنَ عَلَیْهِمْ اٰیٰتِنَا ؕ— قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْ ؕ— اَلنَّارُ ؕ— وَعَدَهَا اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠

22.72. குர்ஆனில் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அவற்றை செவியேற்கும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்களில் நீர் வெறுப்பைக் காண்பீர். கடும் கோபத்தினால் நம்முடைய வசனங்களை எடுத்துரைப்பவர்களை அவர்கள் தாக்கிவிட முனைகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களின் கோபத்தை, வெறுப்பைவிட மோசமான ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அது நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள நரகமாகும். அவர்கள் செல்லும் அந்த இடம் மிகவும் தீயதாகும். info
التفاسير:
ประโยชน์​ที่​ได้รับ​:
• من نعم الله على الناس تسخير ما في السماوات وما في الأرض لهم.
1. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை வசப்படுத்தப்பட்டிருப்பது மனிதர்களுக்கான அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளவையாகும். info

• إثبات صفتي الرأفة والرحمة لله تعالى.
2. அல்லாஹ்வுக்கு இரக்கம், கருணை என்ற இரு பண்புகளும் இருப்பது உறுதியாகிறது. info

• إحاطة علم الله بما في السماوات والأرض وما بينهما.
3. வானங்களிலும் பூமியிலும் அதற்கு இடையில் உள்ள யாவற்றையும் அல்லாஹ்வின் அறிவு வியாபித்துள்ளது. info

• التقليد الأعمى هو سبب تمسك المشركين بشركهم بالله.
4. இணைவைப்பாளர்கள் தங்களின் இணைவைப்பில் நிலைத்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தங்களின் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும். info