Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif

Numri i faqes:close

external-link copy
16 : 50

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ— وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟

திட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். இன்னும் அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்களாக இருக்கிறோம்.) info
التفاسير:

external-link copy
17 : 50

اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟

சந்திக்கின்ற இரு வானவர்கள் சந்திக்கின்ற போது (நாம் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறோம்). வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் (ஒவ்வொரு பக்கத்திலும் மனிதனை) கண்காணிப்பவர் இருப்பார். info
التفاسير:

external-link copy
18 : 50

مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟

பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர. info
التفاسير:

external-link copy
19 : 50

وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟

மரணத்தின் மயக்கம் (மறுமையின்) உண்மையை கொண்டு வந்துவிட்டது. அதுதான் (-அந்த மரணம் இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுகிறவனாக இருந்தாய். info
التفاسير:

external-link copy
20 : 50

وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ— ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟

இன்னும், (அப்போது) எக்காளத்தில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள் ஆகும். info
التفاسير:

external-link copy
21 : 50

وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟

இன்னும், எல்லா ஆன்மாவும் - அதனுடன் (அதை) ஓட்டிவருபவரும் (அதற்கு) சாட்சி சொல்பவரும் இருக்கின்ற நிலையில் - வரும். info
التفاسير:

external-link copy
22 : 50

لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟

திட்டவட்டமாக இதை மறந்(து அலட்சியம் செய்)த நிலையில் நீ இருந்தாய். ஆக, உன்னை விட்டும் உனது (மறதியின்) திரையை நாம் அகற்றி விட்டோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும். info
التفاسير:

external-link copy
23 : 50

وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ

அவனுடைய நண்பர் (-உலகில் மனிதனின் செயல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக அவனுடன் நிர்ணயிக்கப்பட்ட வானவர்) கூறுவார்: “இது (-இவர் உலகில் செய்த அமல்) என்னிடம் தயாராக (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது.” info
التفاسير:

external-link copy
24 : 50

اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ

(மனிதனுடன் நிர்ணயிக்கப்பட்ட இரு வானவர்களே!) நிராகரிப்பாளர், முரண்டுபிடிப்பவர் எல்லோரையும் நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்! info
التفاسير:

external-link copy
25 : 50

مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ

செல்வத்தை (தர்மம் செய்யாமல்) முற்றிலும் தடுப்பவர், (மக்கள் மீது தனது சொல்லாலும் செயலாலும்) எல்லை மீறுபவர், (அல்லாஹ்வின் விஷயத்தில் அதிகம்) சந்தேகிப்பவன் எல்லோரையும் (நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்!) info
التفاسير:

external-link copy
26 : 50

١لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟

எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தினாரோ அவரை கடுமையான தண்டனையில் நீங்கள் தள்ளுங்கள்! (என்று அந்த இரு வானவர்களுக்கு உத்தரவிடப்படும்.) info
التفاسير:

external-link copy
27 : 50

قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

அவனுடைய நண்பன் (-உலகத்தில் மனிதனுடன் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. (நான் அவனை வழி கெடுக்கவில்லை.) எனினும், அவன் தூரமான வழிகேட்டில் இருந்தான்.” info
التفاسير:

external-link copy
28 : 50

قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟

அல்லாஹ் கூறுவான்: “என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு திட்டமாக எச்சரிக்கையை முற்படுத்திவிட்டேன்.” info
التفاسير:

external-link copy
29 : 50

مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠

(இணைவைத்தவர்கள் விஷயத்தில்) என்னிடம் பேச்சுகள் (-எனது வாக்குகள்) மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனாக இல்லை, info
التفاسير:

external-link copy
30 : 50

یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟

“நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற (அந்த) நாளில் (முற்றிலும் நீதமாக தீர்ப்புகள் இருக்கும்).” அந்த நரகம் (பதில்) கூறும்: “(நரகத்தில் போடுவதற்கு பாவிகள்) இன்னும் அதிகம் இருக்கிறார்களா?” என்று. info
التفاسير:

external-link copy
31 : 50

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟

இன்னும், இறையச்சமுள்ளவர்களுக்காக சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும். info
التفاسير:

external-link copy
32 : 50

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ

அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, (அல்லாஹ்வின் கட்டளைகளை) அதிகம் பேணி பாதுகாக்கக்கூடிய எல்லோருக்கும் இ(ந்த சொர்க்கமான)து வாக்களிக்கப்படுகிறது. info
التفاسير:

external-link copy
33 : 50

مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ

எவர் ரஹ்மானை மறைவில் பயந்து (பாவங்களை விட்டு விலகி,) அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய உள்ளத்துடன் வந்தாரோ (அவருக்காக சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது), info
التفاسير:

external-link copy
34 : 50

١دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟

(இத்தகைய நல்லோரே!) நீங்கள் அ(ந்த சொர்க்கத்)தில் ஸலாமுடன் - பாதுகாப்புடன் நுழையுங்கள்! இதுதான் (முடிவே இல்லாத) நிரந்தர நாள் ஆகும். info
التفاسير:

external-link copy
35 : 50

لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟

அவர்கள் நாடுகின்ற எல்லாம் அதில் அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நம்மிடம் அதிகமான (- முடிவில்லாத) அருட்கொடைகள் (-இன்பங்கள் அவர்களுக்கு) உண்டு. info
التفاسير: