*இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ராவை நாடி கஅபா செல்லும்போது குறிப்பிட்ட எல்லை வந்தவுடன் லப்பைக் ஓதி தான் ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தை செய்யப்போகிறேன் என்று நிய்யத் செய்வதாகும். இதற்கு பின்னர் அந்த ஹஜ் அல்லது உம்ராவை முடிக்கும் வரை சில கட்டுப்பாடுகள் உள்ளன, அவற்றை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிலையை இஹ்ராம் உடைய நிலை என்று கூறப்படும்.