Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif

Numri i faqes:close

external-link copy
109 : 11

فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّمَّا یَعْبُدُ هٰۤؤُلَآءِ ؕ— مَا یَعْبُدُوْنَ اِلَّا كَمَا یَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ ؕ— وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِیْبَهُمْ غَیْرَ مَنْقُوْصٍ ۟۠

ஆகவே, (நபியே! அந்த சிலைகளின் பிரமாண்டத்தையும் அவற்றுக்கு செய்ப்படுகின்ற ஆடம்பர சடங்குகளையும் பார்த்து) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் (சிலைகளில்) எதை வணங்கினார்களோ அது போன்றவைகளை தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (தண்டனையின்) பாகம் குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் இவர்களுக்கு முழுமையாகக் கொடுப்போம். info
التفاسير:

external-link copy
110 : 11

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ— وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟

திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். ஆக, (அவர்களுக்குள்) அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. இன்னும், உம் இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லையெனில் (இம்மையிலேயே) இவர்களுக்கிடையில் (காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் உள்ளனர். info
التفاسير:

external-link copy
111 : 11

وَاِنَّ كُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ؕ— اِنَّهٗ بِمَا یَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

நிச்சயமாக உம் இறைவன் எல்லோருக்கும் அ(வர)வர்களுடைய செயல்க(ளுக்குரிய கூலிக)ளை கண்டிப்பாக முழுமையாகக் கொடுப்பான். நிச்சயமாக அவன், அவர்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன். info
التفاسير:

external-link copy
112 : 11

فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ؕ— اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

ஆக, (நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே (நேரான வழியில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருப்பீராக! இன்னும், (பாவங்களை விட்டும்) திருந்தி, (நன்மைகளை செய்து) உம்முடன் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களும் (மார்க்கத்தில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருக்கவும்! இன்னும், (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் (அனைவரும்) செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
113 : 11

وَلَا تَرْكَنُوْۤا اِلَی الَّذِیْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُ ۙ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟

இன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
114 : 11

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَیِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّیْلِ ؕ— اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ— ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ ۟ۚ

இன்னும், (நபியே!) பகலின் இரு ஓரங்களிலும் (-காலை, மாலையில்), இரவின் ஒரு பகுதியிலும் (ஆக, ஐந்து நேர) தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். info
التفاسير:

external-link copy
115 : 11

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟

இன்னும், பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
116 : 11

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِیَّةٍ یَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِی الْاَرْضِ اِلَّا قَلِیْلًا مِّمَّنْ اَنْجَیْنَا مِنْهُمْ ۚ— وَاتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِیْهِ وَكَانُوْا مُجْرِمِیْنَ ۟

ஆக, உங்களுக்கு முன்னர் இருந்த தலைமுறையினர்களில் பூமியில் விஷமத்தை தடுக்கின்ற (அறிவில்) சிறந்தோர் (அதிகம்) இருந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களில் நாம் பாதுகாத்த குறைவானவர்கள்தான் (அவ்வாறு செய்தனர்). இன்னும், அநியாயக்காரர்களோ தாங்கள் எதில் ஆடம்பரமான வாழ்க்கை அளிக்கப்பட்டார்களோ அதையே பின்பற்றினார்கள். (-மறுமையை விட உலக வாழ்க்கையையே அதிகம் விரும்பினார்கள்.) இன்னும், அவர்கள் குற்றவாளிகளாகவே இருந்தனர். info
التفاسير:

external-link copy
117 : 11

وَمَا كَانَ رَبُّكَ لِیُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ ۟

ஊர்(வாசி)களை, - அவற்றில் வசிப்போர்(களில் பலர்) சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் அநியாயமாக அழிப்பவனாக இருக்கவில்லை. info
التفاسير: