Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
141 : 7

وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ— یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

7.141. இஸ்ராயீலின் மக்களே! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரின் அடிமைத்தனத்திலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களின் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்து பெண் பிள்ளைகளை தங்களின் பணிவிடைக்காக உயிருடன் விட்டுவைத்து உங்களுக்கு விதவிதமான இழிவுகளை அளித்துக் கொண்டிருந்தார்கள். பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றியதில் உங்கள் இறைவனிடமிருந்து மிகப் பெரும் நன்றியை வேண்டி நிற்கும் சோதனை இருக்கின்றது. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• تؤكد الأحداث أن بني إسرائيل كانوا ينتقلون من ضلالة إلى أخرى على الرغم من وجود نبي الله موسى بينهم.
1. இஸ்ரவேலர்கள் - அல்லாஹ்வின் தூதர் மூஸா அலை அவர்கள் அவர்களிடையே இருந்த போதும் ஒரு வழிகேட்டிலிருந்து இன்னொரு வழிகேட்டை நோக்கிச் செல்பவர்களாக இருந்தார்கள் என்பதை நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. info

• من مظاهر خذلان الأمة أن تُحَسِّن القبيح، وتُقَبِّح الحسن بمجرد الرأي والأهواء.
2. சமூகத்தின் பலவீனுத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று, வெறும் சிந்தனை மற்றும் மனஇச்சையின் அடிப்படையில் கெட்டவற்றை நல்லவையாகவும் நல்லவற்றைக் கெட்டவையாகவும் அச்சமுதாயம் கருதுவதாகும். info

• إصلاح الأمة وإغلاق أبواب الفساد هدف سام للأنبياء والدعاة.
3. சமூகத்தை சீர்படுத்துவதும் குழப்பங்களின் வாயில்களை அடைப்பதும் தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களின் ஓர் உயரிய இலக்காகும். info

• قضى الله تعالى ألا يراه أحد من خلقه في الدنيا، وسوف يكرم من يحب من عباده برؤيته في الآخرة.
4. இந்த உலகில் தன்னை எந்தப் படைப்பினமும் காணமுடியாது என்று அல்லாஹ் முடிவுசெய்துள்ளான். மறுமையில் தான் விரும்பும் அடியார்களை அவனைப் பார்ப்பதன் மூலம் கண்ணியப்படுத்துவான். info