Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
2 : 62

هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ— وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ

62.2. அவனே படிக்கவும் எழுதவும் தெரியாத அரபுக்களிடையே அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் மீது அவன் இறக்கிய அவனுடைய வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்; அவர்களை நிராகரிப்பிலிருந்தும் தீய பண்புகளிலிருந்தும் தூய்மைப்படுத்துகின்றார்; அவர்களுக்கு குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர் அவர்களின்பால் அனுப்பப்படுவதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டும் கொலை செய்துகொண்டும் உறவுகளை முறித்துக்கொண்டும் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• عظم منة النبي صلى الله عليه وسلم على البشرية عامة وعلى العرب خصوصًا، حيث كانوا في جاهلية وضياع.
1. இஸ்லாத்திற்கு முன்னர் அரபுக்கள் அறியாமையிலும் வீணானவற்றிலும் மூழ்கிக் கிடந்தார்கள். info

• الهداية فضل من الله وحده، تطلب منه وتستجلب بطاعته.
2. நபியவர்களின் தூதுத்துவம் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் பொதுவானது. info

• تكذيب دعوى اليهود أنهم أولياء الله؛ بتحدّيهم أن يتمنوا الموت إن كانوا صادقين في دعواهم لأن الولي يشتاق لحبيبه.
3. “உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்” என்ற சவாலின் மூலம் “தாமே அல்லாஹ்வின் நேசர்கள்” என்ற யூதர்களின் வாதம் பொய்யென நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் நிச்சயமாக நேசன் தனது நேசனை சந்திப்பதை விரும்புவான். info