Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
23 : 6

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ ۟

6.23. இப்பரீட்சையின் பின் தாம் வணங்கிவந்த தங்களின் கடவுள்களிடமிருந்து விலகிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காது. “எங்கள் இறைவா! நாங்கள் உனக்கு யாரையும் இணையாக்கவில்லை. மாறாக நாங்கள் உன்னை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கிக் கொண்டிருந்தோம்.” என அவர்கள் பொய்யுரைப்பார்கள். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• بيان الحكمة في إرسال النبي عليه الصلاة والسلام بالقرآن، من أجل البلاغ والبيان، وأعظم ذلك الدعوة لتوحيد الله.
1. எடுத்துக்கூறி தெளிவுபடுத்துவதே நபியவர்கள் குர்ஆனைக் கொடுத்து அனுப்பப்பட்டதன் நோக்கம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதன் பக்கம் அழைப்பு விடுப்பதே அவற்றில் மிக முக்கியமானதாகும். info

• نفي الشريك عن الله تعالى، ودحض افتراءات المشركين في هذا الخصوص.
2. அல்லாஹ்வுக்கு இணை இல்லையென மறுத்து, இணைகள் உண்டு என்று கூறும் இணைவைப்பாளர்களின் இட்டுக்கட்டல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. info

• بيان معرفة اليهود والنصارى للنبي عليه الصلاة والسلام، برغم جحودهم وكفرهم.
3. யூதர்களும் கிருஸ்தவர்களும் நபியவர்களை மறுத்து நிராகரித்த போதும் நபியவர்கள் உண்மையாளர் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள். info