Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

Numri i faqes:close

external-link copy
50 : 54

وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟

54.50. நாம் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதற்கு ‘ஆகு’ என்ற ஒரு வார்த்தையைத்தான் கூறுவோம். கண்சிமிட்டுவது போன்று விரைவாக நாம் விரும்பியது ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
51 : 54

وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟

54.51. நாம் உங்களைப்போன்று நிராகரித்த முந்தைய சமூகங்களை அழித்துள்ளோம். அதனைக் கொண்டு படிப்பினை பெற்று தனது நிராகரிப்பிலிருந்து தவிர்ந்துகொள்ளக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா? info
التفاسير:

external-link copy
52 : 54

وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟

54.52. அடியார்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கும் வானவர்களின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் இல்லை. அவர்களிடமிருந்து எதுவும் தப்ப முடியாது. info
التفاسير:

external-link copy
53 : 54

وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟

54.53. சிறிய, பெரிய ஒவ்வொரு செயலும் வார்த்தையும் செயல்பதிவேடுகளிலும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலும் பதிவுசெய்யப்படுகிறது. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும். info
التفاسير:

external-link copy
54 : 54

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ

54.54. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இன்பம் பெறக்கூடிய சுவனங்களிலும் ஓடக்கூடிய ஆறுகளிலும் இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
55 : 54

فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠

54.55. வீணான பேச்சோ, பாவமான காரியமோ அற்ற உண்மையான அவையில் வல்லமையுடைய அனைத்தையும் ஆளக்கூடிய அரசனுக்கு அருகில் இருப்பார்கள். அவனுக்கு எதுவும் முடியாததல்ல. அவர்கள் அங்கு பெறப்போகும் நிலையான அருட்கொடைகள் குறித்துக் கேட்காதீர். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• كتابة الأعمال صغيرها وكبيرها في صحائف الأعمال.
1. சிறிய மற்றும் பெரிய செயல்கள் அனைத்தும் செயற்பதிவேடுகளில் பதிவுசெய்யப்படுகிறது. info

• ابتداء الرحمن بذكر نعمه بالقرآن دلالة على شرف القرآن وعظم منته على الخلق به.
2. அருளாளன் தனது அருட்கொடைகளைக் குறிப்பிடும் போது அல்குர்ஆனைக் கொண்டு ஆரம்பம் செய்திருப்பது அதன் சிறப்பையும் அதன் மூலம் படைப்பினத்துக்குச் செய்த அருட்கொடையின் மகத்துவத்தையும் உணர்த்துகிறது. info

• مكانة العدل في الإسلام.
3. இஸ்லாத்தில் நீதியின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• نعم الله تقتضي منا العرفان بها وشكرها، لا التكذيب بها وكفرها.
4. அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மிடம் வேண்டுவது இதுதான், நாம் அவற்றை அறிந்து அதற்காக நன்றிசெலுத்த வேண்டும். ஒருபோதும் அதனை பொய்ப்பித்து அதற்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. info