Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
41 : 36

وَاٰیَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّیَّتَهُمْ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ

36.41. அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதற்கும் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைக்குமான சான்றுகளில் ஒன்று : நாம் ஆதமுடைய சந்ததியினரை நூஹின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திலிருந்து அல்லாஹ்வின் படைப்பினங்களால் நிரம்பிய கப்பலில் ஏற்றி காப்பாற்றினோம். அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் ஒரு ஜோடியை அதில் ஏறச் செய்தான். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• من أساليب تربية الله لعباده أنه جعل بين أيديهم الآيات التي يستدلون بها على ما ينفعهم في دينهم ودنياهم.
1. அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழிகாட்டும் முறைகளில் ஒன்று, அவர்களின் ஈருலகத்திற்கும் பிரயோசனமானவற்றை அறிந்துகொள்வதற்கான சான்றுகளை அவன் அவர்களுக்கு முன்னால் அமைத்து வைத்திருப்பதாகும். info

• الله تعالى مكَّن العباد، وأعطاهم من القوة ما يقدرون به على فعل الأمر واجتناب النهي، فإذا تركوا ما أمروا به، كان ذلك اختيارًا منهم.
2. அல்லாஹ் அடியார்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளான். நன்மையான செயல்களைச் செய்வதற்கும் தீமையானவற்றைவிட்டுத் தவிர்ந்திருப்பதற்கும் தேவையான ஆற்றலை அளித்துள்ளான். எனவே தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை அவர்கள் செய்யாமல் விட்டுவிட்டால் அது அவர்களின் விருப்பத்துடன் நிகழும் ஒன்றேயாகும். info