Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
27 : 34

قُلْ اَرُوْنِیَ الَّذِیْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ— بَلْ هُوَ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

34.27. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிய இணைத்தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள். ஒருபோதும் இல்லை. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். என்றாலும் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• التلطف بالمدعو حتى لا يلوذ بالعناد والمكابرة.
1. அழைக்கப்படுபவர் பிடிவாதத்துடன் விதண்டாவாதம் செய்து விரண்டோடுவதை தவிர்க்குமுகமாக அவருடன் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். info

• صاحب الهدى مُسْتَعْلٍ بالهدى مرتفع به، وصاحب الضلال منغمس فيه محتقر.
2. நேர்வழி பெற்றவர் நேர்வழியின் மூலம் உயர்வு பெற்றவர். வழிகேடர் வழிகேட்டில் மூழ்கி இழிவடைந்தவர். info

• شمول رسالة النبي صلى الله عليه وسلم للبشرية جمعاء، والجن كذلك.
3. நபியவர்களின் தூதுத்துவம் மனித, ஜின் வர்க்கம் அனைவரையும் உள்ளடக்கியது. info