Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
17 : 3

اَلصّٰبِرِیْنَ وَالصّٰدِقِیْنَ وَالْقٰنِتِیْنَ وَالْمُنْفِقِیْنَ وَالْمُسْتَغْفِرِیْنَ بِالْاَسْحَارِ ۟

3.17. அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் தீமைகளை விடுவதிலும் துன்பங்களை எதிர்கொள்வதிலும் பொறுமையாளர்கள்; தங்களின் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்கள்; அல்லாஹ்வுக்கு முழுமையாக கீழ்ப்படிபவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்கள்; இரவின் இறுதிப் பகுதியில் பாவமன்னிப்புக் கோருபவர்கள். ஏனெனில் அந்நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிக நெருக்கமானது. மேலும் உள்ளம் அனைத்துவகையான விஷயங்களை விட்டும் காலியானதாக இருக்கும். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• من أعظم ما يُكفِّر الذنوب ويقي عذاب النار الإيمان بالله تعالى واتباع ما جاء به الرسول صلى الله عليه وسلم.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுவதே மிகப் பிரதானமாக பாவங்களுக்குப் பரிகாரமாக அமைவதோடு நரக வேதனையை விட்டும் பாதுகாக்கும். info

• أعظم شهادة وحقيقة هي ألوهية الله تعالى ولهذا شهد الله بها لنفسه، وشهد بها ملائكته، وشهد بها أولو العلم ممن خلق.
2. மிகப்பெரிய உண்மையும் சாட்சியமும், "வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே"என்பதாகும். எனவேதான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகின்றான். அவனது படைப்பினங்களில் வானவர்களும் கல்வியாளர்களும் சாட்சி கூறுகிறார்கள். info

• البغي والحسد من أعظم أسباب النزاع والصرف عن الحق.
3. சர்ச்சைக்கும், சத்தியத்தை விட்டும் திரும்புதற்கும் முக்கிய காரணிகள் அத்துமீறலும் பொறாமையுமே. info