Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

Numri i faqes:close

external-link copy
14 : 27

وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠

27.14. அவர்கள் அநியாயம் செய்ததனாலும் சத்தியத்தை ஏற்காமல் கர்வம் கொண்டதனாலும் இந்த அத்தாட்சிகள் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்பதை அவர்களது உள்ளங்கள் உறுதியாக அறிந்திருந்தும், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள். -தூதரே!- நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் பூமியில் குழப்பம் செய்த நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நாம் அவர்கள் அனைவரையும் அடியோடு அழித்து நிர்மூலமாக்கி விட்டோம். info
التفاسير:

external-link copy
15 : 27

وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ— وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟

27.15. நாம் தாவூதுக்கும் அவரது மகன் சுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். அவற்றுள் பறவைகளின் மொழி பற்றிய அறிவும் அடங்கும். தாவூதும் சுலைமானும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாகக் கூறினார்கள்: “நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள் பலரைவிட கல்வி நபித்துவம் ஆகியவற்றினால் எங்களை சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”
info
التفاسير:

external-link copy
16 : 27

وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ— اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟

27.16. சுலைமான் தூதுத்துவம், ஞானம், ஆட்சியதிகாரம் ஆகியவற்றில் தம் தந்தை தாவூதுக்கு வாரிசானார். அவர் தம்மீதும் தம் தந்தையின் மீதும் அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை எடுத்துரைத்தவராகக் கூறினார்: “மக்களே! அல்லாஹ் எங்களுக்குப் பறவைகளின் சத்தங்களை புரிவதைக் கற்றுத் தந்துள்ளான். தூதர்களுக்கும் அரசர்களுக்கும் அளித்த அனைத்தையும் அவன் எங்களுக்கு வழங்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு வழங்கிய இவைகளே தெட்டத் தெளிவான அருளாகும்.” info
التفاسير:

external-link copy
17 : 27

وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟

27.17. சுலைமானுக்காக ஜின்கள், பறவைகள் மற்றும் மனிதர்களிலிருந்து படைகள் திரட்டப்பட்டு அவர்கள் முறையான ஒழுங்கோடு அணிவகுக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
18 : 27

حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ— قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ— لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ— وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

27.18. அவ்வாறு அவர்கள் வழிநடத்தப்பட்ட நிலையில் அவர்கள் (ஷாமில் உள்ள) எறும்புப் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது எறும்புகளில் ஒரு எறும்பு கூறியது: “எறும்புகளே! சுலைமானும் அவருடைய படையினரும் நீங்கள் இருப்பதை உணராமல் உங்களை அழித்துவிடாமல் இருப்பதற்காக உங்கள் புற்றுகளில் புகுந்து கொள்ளுங்கள்.” நீங்கள் இருப்பதைத் தெரிந்தால் உங்களை மிதிக்கப் போவதில்லை. info
التفاسير:

external-link copy
19 : 27

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟

27.19. இந்த எறும்பின் பேச்சை செவியுற்ற சுலைமான் புன்னகைத்தார். அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீதும் என் பெற்றோர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதற்கும் உனக்கு விருப்பமான நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. உன் அன்பினால் உன் நல்லடியார்களின் கூட்டத்தில் என்னை சேர்த்தருள்வாயாக.” info
التفاسير:

external-link copy
20 : 27

وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ— اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟

27.20. சுலைமான் பறவைகளை நோட்டமிட்ட பொழுது ஹுத்ஹுத் - கொண்டலாத்திப் பறவையைக் காணவில்லை. அவர் கூறினார்: “நான் ஹூத்ஹூத் பறவையைக் காணவில்லையே! என் பார்வையில் படாமல் சென்றுவிட்டதா? அல்லது அது சமூகமளிக்கவில்லையா?” info
التفاسير:

external-link copy
21 : 27

لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟

27.21. அது சமூகமளிக்கவில்லை என்பது அறிந்துகொண்ட போது அவர் கூறினார்: “சமூகமளிக்கத் தவறியதற்காக நான் அதற்கு கடும் வேதனை செய்வேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன் அல்லது அது சமூகமளிக்காமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தும் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவர வேண்டும்?” info
التفاسير:

external-link copy
22 : 27

فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟

27.22. சிறிதுநேரம் ஹூத்ஹூத் பறவை தாமதித்தது. வந்ததும் அவரிடம் கூறியது: “நீங்கள் அறியாத விஷயத்தை நான் அறிந்துள்ளேன். ஸபாவாசிகளிடமிருந்து சந்தேகமற்ற உண்மையான செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• التبسم ضحك أهل الوقار.
1. புன்னகை கௌரவமானவர்களின் சிரிப்பாகும். info

• شكر النعم أدب الأنبياء والصالحين مع ربهم.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது நபிமார்கள் மற்றும் நல்லோர்கள் அல்லாஹ்வுடன் கடைபிடிக்கும் பண்பாகும். info

• الاعتذار عن أهل الصلاح بظهر الغيب.
3.நல்லவர்கள் முன்னிலையில் இல்லாத போதும் அவர்களுக்காக நியாயம் கற்பித்தல். info

• سياسة الرعية بإيقاع العقاب على من يستحقه، وقبول عذر أصحاب الأعذار.
4. தண்டனைக்குத் தகுதியானவர்களைத் தண்டிப்பதுடன் தக்க காரணம் உடையோரின் நியாயத்தை ஏற்று மக்களை வழிநடத்தல். info

• قد يوجد من العلم عند الأصاغر ما لا يوجد عند الأكابر.
5. பெரியவர்களிடம் இல்லாத அறிவு சில வேளை சிறியவர்களிடம் இருக்கலாம். info