Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
62 : 24

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ— اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ— فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

24.62. நிச்சயமாக அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்களாவர். அவர்கள் தூதருடன் முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட ஏதேனும் காரியத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் அவரிடம் போகும் போது அனுமதி பெறாமல் திரும்ப மாட்டார்கள். -தூதரே!- உம்முடைய சபையிலிருந்து வெளியேறும் போது உம் அனுமதி பெற்று திரும்புபவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாவர். அவர்கள் தங்களின் சில முக்கியமான விஷயத்திற்காக உம்மிடம் அனுமதி கோரினால் அவர்களில் நீர் நாடியோருக்கு அனுமதியளித்து விடுவீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• دين الإسلام دين النظام والآداب، وفي الالتزام بالآداب بركة وخير.
1. இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கங்களையும் ஒழுங்கையும் போதிக்கும் மார்க்கமாகும். அந்த ஒழுங்குகளை கடைபிடிப்பதில் அபிவிருத்தியும் நலவும் உண்டு. info

• منزلة رسول الله صلى الله عليه وسلم تقتضي توقيره واحترامه أكثر من غيره.
2. மற்றவர்களைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிக கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அந்தஸ்த்துக்குரியவராவார். info

• شؤم مخالفة سُنَّة النبي صلى الله عليه وسلم.
3. நபியவர்களின் வழிமுறைக்கு மாறாக செயல்படுவது துர்பாக்கியமாகும். info

• إحاطة ملك الله وعلمه بكل شيء.
4. அல்லாஹ்வின் ஆட்சியதிகாரமும் அறிவும் அனைத்தையும் சூழந்துள்ளன. info