Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
37 : 22

لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ— كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ— وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟

22.37. நீங்கள் பலிகொடுக்கும் பிராணிகளின் மாமிசமோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை, அவனிடத்தில் கொண்டு செல்லப்படுவதுமில்லை. மாறாக பலிப்பிராணிகளின் மூலம் அவனை நெருங்கி வழிப்படுவதில் உளத்தூய்மையோடு நடந்து அவற்றில் நீங்கள் கடைபிடிக்கும் இறையச்சமே அவனிடம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டியதற்காக அவனைப் பெருமைப்படுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு அவன் உங்களுக்கு அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளான். -தூதரே!- தங்கள் இறைவனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்களுக்கு, அவனது படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்துகொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• ضَرْب المثل لتقريب الصور المعنوية بجعلها في ثوب حسي، مقصد تربوي عظيم.
1. விஷயத்தைப் புரிய வைப்பதற்காக, அதனை கண்டு உணரக்கூடிய ஒரு வடிவத்தில் காட்டுவதற்காக உதாரணங்கள் கூற்றப்பட்டுள்ளன. info

• فضل التواضع.
2. பணிவின் சிறப்பு. info

• الإحسان سبب للسعادة.
3.நல்லுபகாரம் சுபீட்சத்திற்கான காரணமாகும். info

• الإيمان سبب لدفاع الله عن العبد ورعايته له.
4. நம்பிக்கை கொள்வது அல்லாஹ் அடியானைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்குமான காரணியாகும். info